நந்தி பகவான் சிவபெருமானுக்கு வாகனமாகும் பேறு பெற்ற திருத்தலம்!

Nandi blessed shrine that is a vehicle for Lord Shiva
Nandi blessed shrine that is a vehicle for Lord Shiva
Published on

சிவன் - பார்வதி இருவர் முன்பும் ஆனந்த வடிவாக அமர்ந்திருக்கக் கூடியவர் நந்தியம்பெருமான். சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வைக்கு நேர் எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. அப்படி ஒரு வரத்தை சிவபெருமானே நந்திக்கு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் சிவத்தலங்கள் அனைத்திலும் ஈசன் கருவறைக்கு முன்பு காவலாக அமர்ந்துள்ள நந்திக்கு ஈசன் பிரத்தியேகமாக அருள்பாலித்த தலம் ஆந்திர மாநிலம், நந்தியால் அருகே உள்ள மகாநந்தி திருத்தலமாகும்.

பல யுகங்களுக்கு முன்னர் சிலாத மகரிஷி மலைத்தொடர் பகுதியிலிருந்த வில்வ மரக்காடுகளின் இடையே ஆசிரமம் ஒன்றை அமைத்து தங்கியிருந்தார். அவருக்கு தனக்குப் பின்னர் ஈசனை வழிபட ஒரு மகன் வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதுகுறித்து மகேஸ்வரனிடம் குழந்தை பேறு அருளுமாறு சிலாத மகரிஷி வேண்டினார்.

அதன்படி இறைவன் அருளால் மல்லிகார்ஜுனன், நந்தனன் என்ற இரண்டு மகன்கள் சிலாத மகரிஷிக்கு பிறந்தனர். பெரிய மகன் மல்லிகார்ஜுனன் ஸ்ரீசைலத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனதை நினைத்து தவம் செய்தான். அதன் மூலம் ஈசனை தனது இதயத்தில் குடிகொள்ளும் வரத்தைப் பெற்றான்.

இளைய மகன் நந்தனன் தனது தந்தையிடம் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றுத் தேர்ந்து, கயிலைநாதனை நோக்கி தவம் புரிந்தான். அவனுக்குக் காட்சி தந்த சிவபெருமான், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு நந்தனன், ‘நான் எப்போதும் உங்களுக்கு சேவை செய்யும் பெரும் பேற்றை தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.

இதையும் படியுங்கள்:
பயணத்தைப் பாதுகாப்பாக்கும் வெண்ணங்கொடி முனியப்பன்!
Nandi blessed shrine that is a vehicle for Lord Shiva

நந்தனின் உள்ளத்தில் இருந்த அன்பை உணர்ந்த ஈசன், அவரை தனது வாகனமாக விளங்குமாறு அருள் செய்ததுடன், தனது பூத கணங்களுக்கு தலைவராகவும் இருக்கும் தகுதியையும் அளித்தார். அப்படிப்பட்ட வரத்தை நந்தி பெற்ற திருத்தலம் என்பதால், நந்திக்கு உரிய தலமாக மகாநந்தி தலம் அறியப்படுகிறது.

நந்தனன் தவம் செய்யும்போது உருவான புற்றே இந்தத் தலத்தில் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. இந்தத் தலத்தில் சிவபெருமான் மகாநந்தீஸ்வரராகக் காட்சி தருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com