நவராத்திரியும் நவ ஆலமும்!

நவராத்திரியும் நவ ஆலமும்!

nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வ்வொரு நாளும் நவராத்திரி திருவிழா கொண்டாடி முடிந்த பின்னர், குழுவிற்கு ஒவ்வொரு வகையான ஆலம் எடுத்துவிட்டு படுக்கச் செல்லலாம்.

பூ ஆலம்: ஒரு தட்டில் மைதா பசை தடவி, அதில் அழகிய பூவிதழ்களை கோலம் போல் அமைத்து, நடுவில் ஒரு அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

முத்து ஆலம்: மைதா பசை தடவிய தட்டில் வறுத்த பெரிய ஜவ்வரிசியை கோலம் போன்ற டிசைனில் ஒட்டவைத்து, நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

தீப ஆலம்: மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து, அதில் பூ விதைகளைத் தூவி நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

முக்கூட்டு ஆலம்: மஞ்சள், பன்னீர், சந்தனம் இவை மூன்றும் கலந்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

நவதானிய ஆலம்: நவதானியங்களை கோலம் போல் மைதா பசை தடவிய தட்டில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்க வேண்டும்.

ஃபெங்சுயி ஆலம்: தட்டில் கலர் கோலி குண்டுகளால் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம். கோலி குண்டுகள் ஃபெங்சுயிபடி மிகவும் நல்லதாம்.

மதுர ஆலம்: சர்க்கரையும் கல்கண்டும் வைத்து நடுவில் விளக்கு ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

அட்சதை ஆலம்: அட்சதையில் மஞ்சள், குங்குமம் கலந்து இரு நிறங்களில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

ஐவகை பருப்பு ஆலம்: துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, கேசரி பருப்பு இந்த ஐந்து வகை பருப்புகளை ஒரு தட்டில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஒன்பது படிகள், மரப்பாச்சி பொம்மைகள்... ஏன்? எதற்கு?
நவராத்திரியும் நவ ஆலமும்!

இந்த ஒன்பது நாட்களிலும் எடுக்கப்படும் ஆலங்களில் மீண்டும் உபயோகப்படுத்தக் கூடியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளலாம். மீண்டும் உபயோகிக்க முடியாதவற்றை வாடிய பூக்களோடு சேர்த்து போட்டுவிடலாம்.

பின்குறிப்பு: மனிதர்களுக்கு எடுக்கப்படும் ஆலம் மட்டுமே வாசலில் கோலத்தின் மீது கொட்டப்படும். தெய்வங்களுக்கு எடுக்கப்படும் ஆலத்தை எக்காரணம் கொண்டு வாசல் தரையில் கொட்டவே கூடாது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com