ஒரே நாளில் ஐந்து பூஜைகள், ஐந்து தலங்கள் வாழ்வை வளமாக்கும் பஞ்ச ஆரண்ய தல வழிபாடு!

Pancha Aranya Temple Worship
Pancha Aranya Temple Worship
Published on

திருக்கருகாவூர், திரு அவளிவநல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் என அழைக்கப்படும் ஐந்து பஞ்ச ஆரண்ய தலங்கள், உஷத் கால பூஜை தொடங்கி, அர்த்த ஜாம பூஜை வரை தரிசிக்கும் வகையில் தஞ்சாவூரை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஆரண்யம் என்றால் வனம் என பொருள்படும். ஒரு காலத்தில் காடுகளாக இருந்து இன்றைக்கு கிராமங்களாகவும் ஊர்களாகவும் அமைந்திருக்கும் பஞ்ச ஆரண்ய தலங்களை ஒரே நாளில் தரிசித்தால் மகா புண்ணியம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அத்தகைய வாழ்வை வளமாக்கும் பஞ்ச ஆரண்ய தலங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. திருக்கருகாவூர்: திருக்கருகாவூர் திருத்தலம் தஞ்சாவூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. முல்லைவனநாதர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும்
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை என்ற பெயருடன் அம்பாளும் அருள்பாலித்து பெண்களின் கர்ப்பத்தைக் காத்தருளும் அற்புதமான கோயில். காலை 5.30 முதல் 6 மணி உஷத் கால அதிகாலை பூஜையில் குழந்தை பேறு, சுகப்பிரசவம் வேண்டி முதலில் தரிசிக்க வேண்டிய அருமையான திருத்தலம்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு பற்றி வெளிவராத ரகசியங்கள்: 2025ல் படைக்கப்பட்ட பிரம்மாண்ட சாதனை!
Pancha Aranya Temple Worship

2. திரு அவளிவநல்லூர்: ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சாட்சிநாதர் ஆலயம் அமைந்திருக்கும திரு அவளிவநல்லூர் திருக்கருகாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அமைதியே உருவான அழகிய கோயிலில் அம்பாள் கருணையுடன்  காட்சி தருவதோடு, இத்தலத்து பார்வதியையும் பரமேஸ்வரனையும் சிறப்புடன் காலை பூஜை வேளையான 8.30 முதல் 9.30 வரை வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவுவதோடு கருத்து வேறுபாடு இல்லாமல் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

3. அரித்துவாரமங்கலம்: புராதான பெருமைகள் கொண்ட ஸ்ரீ அலங்காரநாயகி சமேத ஸ்ரீ பாதாள ஈஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் அரித்துவாரமங்கலம் தலத்தில் நடைபெறும் உச்சி கால பூஜையில் (11 முதல் 12.30) அம்மையப்பனை மனதார வேண்டிக்கொண்டால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
பயத்தைப் போக்கி எதிரிகளை வீழ்த்தும் அன்னை: பிரத்யங்கிரா தேவி வழிபாடு!
Pancha Aranya Temple Worship

4. ஆலங்குடி குரு ஸ்தலம்: ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ எழிலார்குழலி வீற்றிருக்கும் திரு இரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலத்தில் சந்தியா கால பூஜையின் போது (மாலை 5.30 முதல் 6) தரிசித்தால் குரு பலம் கிடைப்பதோடு கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம். குரு தட்சணாமூர்த்தி இந்தத் தலத்தில் அழகுற வீற்றிருக்கிறார்.

5. திருக்கொள்ளம்புதூர்: ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர், ஸ்ரீ சௌந்தர்யநாயகி வீற்றிருக்கும் பஞ்ச ஆரண்ய தலமான திருக்கொள்ளம்புதூர் தலத்து இறைவனையும் அம்பாளையும் வழிபட்டால் சித்த பிரமை உள்ளவர்கள், மனக்குழப்பத்தில் தவிப்பவர்கள், எப்போதும் பயத்துடன் கதிகலங்குபவர்களுக்கு தெளிவு பிறந்து மன நோய் நீங்கும். இத்தலத்தில் இரவு அர்த்த ஜாம பூஜையில் (இரவு 7.30 முதல் 8.30) வழிபட்டால் மனோ பலம் கிடைக்கும் என்பது சிவாச்சாரியார்கள் கூற்றாக உள்ளது.

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க ஒரே நாளில் பஞ்ச ஆரண்ய தலங்களையும் ஐந்து வேளைகளில் பிரார்த்தனை செய்து வழிபட்டால்  எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com