கோவில் பிரசாதங்களின் தனித்துவ சுவைக்கும் மணத்திற்கும் இதுதான் காரணமா?

மருத்துவ மற்றும் ஆன்மீக குணங்கள் நிறைந்த பச்சை கற்பூரம் உண்மையிலேயே இயற்கை நமக்கு அளித்த ஒரு கொடைதான்.
பச்சை கற்பூரம்
பச்சை கற்பூரம்AI Image
Updated on

ந்தியாவில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் இறைவனுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் தனித்துவமான சுவையும், நறுமணமும் கொண்டவையாக இருக்கும். அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

அதாவது கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் தீர்த்தம், சர்க்கரைப் பொங்கல், திருப்பதி லட்டு, பஞ்சாமிர்தம் போன்றவற்றில் தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் பச்சை கற்பூரம் (Pachai Karpooram) சிறிதளவு சேர்க்கப்படுவதுதான் அதற்கு முக்கிய காரணம்.

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பச்சை கற்பூரம் சேர்க்கப்படுவதற்கு பின்னால் ஆன்மிக நம்பிக்கையையும், அறிவியலும் உள்ளது. வாங்க இன்று இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.

கற்பூர மரத்திலிருந்து பெறப்படும் இந்த பச்சை கற்பூரம், மருத்துவ மற்றும் ஆன்மீக குணங்கள் நிறைந்த ஒரு நறுமணப் பொருளாகும். பொதுவாக இது உணவில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுகிறது. ஆனால் திருப்பதில் லட்டில் சர்க்கரை மீதான ஆசையை கட்டுப்படுத்த பச்சை கற்பூரம் பயன்படுகிறது.

கற்பூரத்தில் ஒரு வகையான பச்சை கற்பூரத்தை மருந்தாகவும், இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வாசனை பொருளாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட, பலகாரத்தில் பச்சை கற்பூரத்தை சேர்த்து தயாரித்தால் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். எவ்வித பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் இருக்காது என்பதால் இதை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

மேலும் இது பெருமாளுக்கு உகந்ததாகவும், தூய்மை மற்றும் மங்களத்தின் அடையாளமாகவும் கருதப் படுகிறது. இது, பண்டைய காலத்திலிருந்தே சில பாரம்பரிய உணவுப் பண்டங்கள், இனிப்பு வகைகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்டு, பிரசாதங்களுக்குத் தனித்துவமான மணத்தையும், சுவையையும் தருகிறது. இறைவழிபாட்டின்போது, இதன் நறுமணம் மனதிற்குப் புத்துணர்ச்சியை அளித்து, மனதை ஒருமுகப்படுத்தி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.

வீடுகளில் பூஜை செய்யும்போது இதைப் பயன்படுத்துவதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

பச்சை கற்பூரம்
பச்சை கற்பூரம்https://manithan.com

இதன் தீவிர நறுமணம் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை அண்டவிடாமல் பாதுகாக்கும். இதன் வாசனை வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி, தெய்வீக சூழலை உருவாக்குகிறது. வீட்டில் தூபம் போடும்போது இதை பயன்படுத்தினால் வீடு முழுவதும் நறுமணம் பரவி சுபிட்சம் உண்டாகும்.

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். அதேபோல் 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும்.

பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்த்து, மகாலட்சுமியின் அருளை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இது லட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுவதால், இதன் நறுமணம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது ஐதீகம். எனவே வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் பச்சை கற்பூரம் இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
நுகர்ந்தாலே மருத்துவப் பலன்களை அள்ளித் தரும் பச்சை கற்பூரம்!
பச்சை கற்பூரம்

மேலும், பணத்தை ஈர்க்கும் குணம் கொண்டதால், வீட்டில் நடக்கும் அனைத்து சுபகாரியங்களிலும் இது முக்கிய இடம் பெறுகிறது. பூஜை அறையில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து வரலாம்.

ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாகக் கட்டி வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு (குபேர மூலை) மூலையில் வைத்து தூபம் காட்டி வழிபட்டால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும் என்பது ஐதீகம். குபேர மூலையில் இதனை வைத்து தூபம் காட்டி வழிபடுவதால் மன அமைதியும் செல்வச் செழிப்பும் பெருகும்.

மருத்துவ ரீதியாக, மிகக் குறைந்த அளவில் சேர்க்கப்படும் பச்சை கற்பூரம் சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு பிரசாதம் கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது. மேலும், இது செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து பசியைத் தூண்டுவதோடு, நெஞ்சுச்சளி, தொண்டைக்கட்டு மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கும் நல்ல நிவாரணம் அளிக்கிறது.

இயற்கை நமக்கு அளித்த அரிய மூலிகையான பச்சை கற்பூரத்தை பிரசாதத்தில் சேர்ப்பது, வெறுமனே சுவைக்காக மட்டுமல்ல; பக்தர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பேணுவதற்காகத்தான். இதன் தனித்துவமான வாசனை மூளையின் நரம்புகளைத் தளர்த்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனதுக்கு ஒருவித அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் தருகிறது.

இவ்வளவு மருத்துவ மற்றும் ஆன்மீக குணங்கள் நிறைந்த பச்சை கற்பூரம் உண்மையிலேயே இயற்கை நமக்கு அளித்த ஒரு கொடைதான்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துவது ஏன் தெரியுமா?
பச்சை கற்பூரம்

நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்த இந்த ஆன்மிகப் பழக்கம், அறிவியல் பூர்வமான ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

logo
Kalki Online
kalkionline.com