பகையைத் துரத்தும் ஆற்றல் மிக்க மயூரபந்தம்!

Mayurabandham of the Pamban Swamigal
Mayurabandham of the Pamban Swamigal
Published on

முருகப்பெருமான் ஒருவரையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்து, அவரை கனவிலும் நேரிலும் பலமுறை தரிசித்த பெருமை உடையவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். இம்மகான் 1850 முதல் 1929 வரை வாழ்ந்தவர். இவர் பாம்பன் சுவாமிகள் என பக்தர்களால் அழைக்கப்பட்டவர். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ‘சண்முகக்கவசம்’ மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த சண்முகக் கவசத்தினை தொடர்ந்து பாராயணம் செய்து முருகன் தரிசனத்தைக் கண்டவர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள். சுவாமிகள் அருளிய மற்றுமொரு சக்தி மிக்க மந்திரம் ‘மயூரபந்தம்’ ஆகும்.

மயூரபந்தம், சண்முகக்கவசம் முதலான பாராயண மந்திரங்களை மனமுருகி பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் முருகப்பெருமான் மயிலின் மீதேறி வந்தும் மயிலாக வந்தும் காட்சியளிப்பார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் காலில், 1923ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி அன்று குதிரை வண்டி ஏறி கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், முருகப்பெருமான் இரண்டு மயில்களாக மேற்கு நோக்கி நின்று சுவாமிகளுக்கு தரிசனம் கொடுத்தார். முருகப்பெருமானின் மயில் வாகன தரிசனத்தால் எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் சுவாமிகள் குணமடைந்தார்.

சுவாமிகள் குணமடைந்த நாளானது ‘மயூர சேவன விழா‘ என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் சமாதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் அவர் இருந்த கட்டில் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய மயூரபந்தம், மகத்துவம் பல வாய்ந்தது. மயூரபந்தம் சகலவிதமான தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் வல்லமை கொண்டது. யாப்பிலக்கணத்தைப் பின்பற்றி தேர் வடிவத்தில் பாக்களை இயற்றுவது ‘ரதபந்தம்’ எனப்படும். இதேபோல, மயில் வடிவத்தில் பாக்களை இயற்றுவது ‘மயூரபந்தம்’ என அழைக்கப்படுகிறது.

மயூரபந்தம்:

‘வரதந திபநக ரகமுக வொருகுக
வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ
வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு
முனிவருதி’

- ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிச்செய்த மயூரபந்தம் நமக்கு ஏற்படும் சகல விதமான பிரச்னைகளையும் அகற்றும் வல்லமை படைத்தது. இந்த மயூரபந்தத்தைத் தினமும் காலையில் பாராயணம் செய்து வந்தால் உங்களுடைய பிரச்னைகள் அகன்று விடும். இந்த மயூரபந்தத்தை பாராயணம் செய்யும் வேளையில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் சண்முகர் முகத்தில் அம்மைத் தழும்பு!
Mayurabandham of the Pamban Swamigal

முக்கியமாக, புலால் உண்ணவே கூடாது. முதன்முதலில் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யத் தொடங்கும்போது செவ்வாய்க்கிழமையில் தொடங்கி தினமும் காலையில் பாராயணம் செய்து வர வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி பூமாலை சூட்டி மனமுருகி மயூரபந்தத்தைப் பாராயணம் செய்து வாருங்கள்.

மயூரபந்தம் உங்களை நாடி வரும் பகையைத் துரத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்யும். மேலும், இதனை மனமுருகி அனுதினமும் பாராயணம் செய்து வந்தால் தலைமுறை கடந்த பகைகளும் விலகும் என்பதும் ஐதீகம். பில்லி, சூனியங்களையும் நீக்கும் வல்லமை கொண்டது மயூரபந்தம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com