பண வசியம், ஜன வசியம் உண்டாக்கும் மூலிகை திலகம் தெரியுமா?

Pana Vasiyam, Jana Vasiyam Undakkum Mooligai Thilagam Theriyumaa?
Pana Vasiyam, Jana Vasiyam Undakkum Mooligai Thilagam Theriyumaa?

‘பணிபுரியும் அலுவலகத்தில் உடனே சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். செய்யும் தொழிலில் அதிரடியாக மாற்றம் நடந்து லாபத்தை சம்பாதிக்க வேண்டும்’ இப்படி பலருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், இதை எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி காட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதற்கு பணவசியமும் ஜனவசியமும் தேவை.

இந்த இரண்டு வசியத்தையும் எல்லோராலும் அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியாது. ஒருசிலருக்கு மட்டுமே அந்த யோகம் கிடைக்கும். அந்த யோகத்தை கொண்டவர்கள்தான் இன்று பெரும் பணக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் பணக்காரராக மாற செய்யவேண்டிய எளிமையான ஒரு தாந்த்ரீக பரிகாரத்தை இன்று காணலாம். தாந்த்ரீகம் என்றதும் யாரும் பயப்பட வேண்டாம்‌. குலதெய்வத்தை நினைத்து ஆன்மிக ரீதியாகத்தான் இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம்.

பண வசியம் ஜன வசியம் ஏற்பட: சக்தி வாய்ந்த இந்த திலகத்தை தயார் செய்து நெற்றியில் இட்டு வந்தால் போதும்; உங்களுக்கு பண வசியம் ஏற்பட்டு விடும். அது என்ன திலகம்? அதை எப்படி தயார் செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

இந்தத் திலகம் தயார் செய்ய நமக்கு முக்கியமாகத் தேவைப்படக்கூடிய பொருள் பிரம்ம கமல செடியில் இருக்கும் இலை. பிரம்ம கமல பூவை பற்றி நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பூ வருடத்தில் ஒருமுறை இரவு நேரத்தில் பூக்கும். விடிவதற்குள் இந்த பூ உதிர்ந்து விடும். ஆனால், இதனுடைய வாசம் அத்தனை சக்தி நிறைந்தது. நேர்மறை ஆற்றலைக் கொண்டது. இந்த பிரம்ம கமல பூ நமக்கு வேண்டாம். அந்த பிரம்ம கமலச் செடியில் இருக்கும் இலை மட்டும் நமக்குக் கிடைத்தால் போதும். ஒரு இலை அல்லது இரண்டு இலை எத்தனை இலை கிடைத்தாலும் சரிதான்.

ஒரு சின்ன உரலின் அந்த இலையை வைத்து அதோடு அரகஜா, புனுகு, கோரோசனை ஆகிய மூன்று வாசம் நிறைந்த பொருட்களையும் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அந்த விழுதுதான் சக்தி வாய்ந்த திலக மை. குறிப்பாக, இந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டிய திதி தசமி திதியாக இருக்க வேண்டும். மாதத்தில் இரண்டு தசமி திதிகள் வரும். இந்தத் திலகத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த டப்பாவை பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்திடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, இந்த டப்பாவை கையில் வைத்துக் கொண்டு, ‘வசிய வசிய ஜன வசிய, வசிய வசிய பண வசிய’ என்ற மந்திரத்தை சொல்லி அந்த திலகத்துக்கு சக்தி கொடுக்க வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி அந்த திலகத்திற்கு சக்தியை ஏற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குறட்டை விடுவதற்கான காரணமும் நிவாரணமும்!
Pana Vasiyam, Jana Vasiyam Undakkum Mooligai Thilagam Theriyumaa?

பிறகு பூஜையறையில் குலதெய்வத்தின் பாதத்தில் அந்தத் திலகத்தை வைத்து விடுங்கள். அவ்வளவுதான் தினமும் எழுந்து குளித்துவிட்டு, வெளியில் செல்வதற்கு முன்பு, வேலைக்குச் செல்வதற்கு முன்பு, வியாபாரத்திற்கு செல்வதற்கு முன்பு, இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால் பண வசியம் ஜன வசியம் ஏற்பட்டு உங்களுக்கு பெரிய யோகம் ஏற்படும்.

பெரிய சூட்சுமம் மறைந்திருக்கும் பரிகாரம் இது. இதை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே இருக்காது. ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் மட்டும் இந்தத் திலகத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்தப் பரிகாரத்தை முழுமனதுடன் செய்து பலன் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com