

ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகாதேவி இவர்களுக்கு நான்கு புதல்வர்கள். ரேணுகாதேவி ஒரு சிறந்த பத்தினியாகவும் குடும்பத்தை நல்வழிப்படுத்தி வாழ்ந்து வந்தார். ஐந்தாவது மகனாக பரசுராமர் பிறக்கின்றார். இவர் பிறப்பிலிருந்து அதிக கோபகுணம் உடையவராக உள்ளார். இந்தப் பரசுராம அவதாரமே மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டு காலங்களிலும் இருந்த பெருமையை பெற்றுள்ளது.
இதில் பரசுராமன் அவதாரம் ராமாயணத்தின் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான ராமரை பரசுராமர் பார்ப்பது அரிதான நிகழ்வாக இருந்தது. இந்த காரணத்தினால் பரசுராம அவதாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராமாயணத்தில் ராமர் அவதாரம் தந்தையின் வாக்கை காப்பாற்றுவதாக இருந்தால், பரசுராம அவதாரம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னும் சொல்லிற்கிணங்க பரசுராமர் தன் தந்தை சொல்லை மீறாமல் இருந்தார்.
பரசுராமருக்கு பல கலைகள் தெரிந்த போதிலும் அவர் மனம் பூர்த்தியடையாமல் தனக்கென ஒரு சிறந்த ஆயுதம் வேண்டும் என்று எண்ணி சிவனை நோக்கி தவம் புரிந்தார். அதன் விளைவாக அவருக்கு சிவபெருமான் கோடாரியை வரமாக கொடுத்தார்.
பரசுராமரின் தாய் ஒரு கர்ப்புக்கரசியாகவும் பத்தினியாகவும் வாழ்ந்து வந்ததால் அவர் களிமண்ணில் பல கைவினைப் பொருட்களை குழைத்து செய்யும் பானைகளை சுட வைக்காமலேயே தண்ணீர் இறைத்து பயன்படுத்தலாம். அவரது கர்ப்பின் அடையாளமாக அது நீரில் கரையாது என்ற வரத்தை பெற்றிருந்தது. அதன் காரணமாகவே அவர் ஆற்றோடைகளில் களிமண்களில் செய்த பானைகளில் அப்படியே நீர் இறைத்து ஆசரம தேவைக்காக பயன்படுத்துவார்.
ஒருநாள் ஆற்றில் குளித்துவிட்டு நீர் இறைப்பதற்காக ரேணுகாதேவி சென்றபோது அங்கு ஒரு கந்தர்வன் குதிரை பூட்டப்பட்ட தேரில் வருவதைப் பார்த்து அவனுடைய அழகில் மயங்கி நின்றாள்.
கனப்பொழுதில் சிதறடைந்த அவளுடைய சபலம் காரணமாக அவள் வைத்திருந்த பானை நீரில் கரைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகாதேவி அங்கேயே திகைத்து நின்றாள். இதனை தன் ஞான திருஷ்டியில் அறிந்த ஜமதக்னி முனிவர் கர்ப்பு நெறி தவறாத பெண் எவ்வாறு ஒரு சிறு பொழுதில் சபலம் அடைய முடியும் நீ புனிதத்துவம் அற்றவள் என்று கூறி கோபமடைந்து தன்னுடைய புத்திரர்கள் நால்வரிடமும் தன் தாயின் தலையை வெட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
ஆனால் புத்திரர்கள் மறுத்ததால் அவர்களுக்கு கல்லாகி போகுமாறு சாபமிட்டார். பின்னர் பரசுராமரிடம் நீ உன் தாயின் தலையை துண்டித்துவிடு என்று ஆணையிட்டார். அதற்கு பரசுராமரும் நான் அவ்வாறு செய்தால் எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும் என்று கேட்டார். ஜமதக்னி முனிவரும் சரி என்று கூறினார். பரசுராமர் தன் தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை துண்டித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று காட்டினார். ஜமதக்னி முனிவரிடம் சென்று தான் தாயின் தலையை துண்டித்துவிட்டதாக கூறி தனக்கு இரண்டு வாரங்கள் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு ஜமதக்னி முனிவர் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பரசுராமர் தன்னுடைய நான்கு உடன் பிறந்தவர்களும் மீண்டும் மனிதர்களாக மாறவேண்டும் என்ற வரத்தையும் தன்னுடைய தாய் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்ற வரத்தையும் கேட்டார்.
பரசுராமரின் இந்த சமயோசித புக்தி அறிந்த ஜமதக்னி முனிவர் அந்த வரத்தை வழங்கினார். அதன்படியே தன் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் உயிர் பெற்று வந்தனர். நிகழ்வுக்குப் பின் ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு கார்த்தவீரிய அர்ஜுனன் என்ற சத்ரிய மன்னன் படையோடு வந்தான் முனிவர் அவர்களுக்கு விருந்து படைத்தார். இதனைப் பார்த்த மன்னன் குறுகிய நேரத்தில் இவ்வாறான படையல் விருந்து எவ்வாறு சமைத்தீர்கள் என்று முனிவரிடம் கேட்டான்.
அதற்கு முனிவர் தம்மிடம் காமதேனு என்னும் பசு உள்ளது என்பதையும் அது வேண்டிய வரன்களை தரும் என்பதையும் கூறினான். அந்த பசுவின் மீது மோகம் கொண்ட மன்னன் அதை திருடவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜமதக்னி முனிவரை கொன்று காமதேனுவை திருடி சென்றார்.
இறந்து கிடந்த தன் கணவனை பார்த்த ரேணுகாதேவி தன் நெஞ்சில் 21 முறை அடித்து அழுதார். இதனைப் பார்த்த பரசுராமருக்கு கோபம் தலைக்கேறியது அவர் அதர்மங்களை புரியும் 21 தலைமுறை சத்திரியர்களைக் கொன்று அவர்களது ரத்தத்தால் 5 ஏரிகளை நிரப்பினார். விஷ்ணுவின் பரசுராம அவதாரம் அதர்மங்களை புரியும் சத்திரியர்களைக் கொன்று தர்மத்தை நிலை நாட்டியது.