வீட்டின் வாசலில் சீனர்களின் ‘பகுவா கண்ணாடி’ வைத்துப் பாருங்களேன்!

Place the Chinese 'Bagua mirror' at the door of the house
Place the Chinese 'Bagua mirror' at the door of the househttps://www.magicbricks.com

ந்தியர்கள் எப்படி வாஸ்து சாஸ்திர முறையை பயன்படுத்துகிறார்களோ அதுபோல சீனர்கள் ஃபெங் சுய்யை பயன்படுத்துகிறார்கள். இந்த ஃபெங் சுய் முறையில் பணம் அதிகரிக்க, தீய சக்திகள் விலகுவது போன்ற விஷயங்களுக்காக வீட்டில் சில பொருட்களை வைப்பதனால் மாற்றம் கொண்டு வர முடியும்.

அதற்காக அவர்கள் பயன்படுத்தும் பொருள்தான் பகுவா கண்ணாடி. இந்த கண்ணாடியை பொதுவாக வீட்டின் வாசலில் மாட்டுவார்கள். இது செல்வத்தை ஈர்க்கும், அதிர்ஷ்டத்தை தரும், தீய சக்தியையும், துரதிஷ்டத்தையும் போக்கக்கூடியது. வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகளை சரிசெய்ய உதவும். இதை வெண்கலத்திலே செய்வார்கள். இந்தக் கண்ணாடி பார்பதற்கு மிகவும் அழகாக டெக்கரேட்டிவ் பொருள் போல இருக்கும். இதை வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் வைக்கலாம். இதன் விலை 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஆன்லைன்னில் கிடைக்கிறது.

பாகுவா கண்ணாடி 5 இன்ச் டையா மீட்டரை கொண்டது. இதனுடைய பிரேம் பிளாஸ்டிக், இரும்பு, மரத்திலானதாக இருக்கும். இதன் நிறம் பொதுவாக சிவப்பு நிறமாக இருக்கும், மஞ்சளுடன் சேர்ந்த கருப்பு, பச்சை, தங்க நிறத்தை கொண்டிருக்கும். இந்தக் கண்ணாடி பார்ப்பதற்கு சாதாரண கண்ணாடி போல் இல்லாமல் ஆக்டோகனை போல எட்டு பக்கங்களைக் கொண்டிருக்கும்.

இந்தக் கண்ணாடியை வீட்டில் நிலைவாயிற்படியில் மாட்ட வேண்டும். இதை வீட்டிற்குள்ளே மாட்டக்கூடாது. இதை எப்போதும் வெளிப்பக்கம் பார்ப்பது போல மாட்டுவது நல்லதாகும். இந்தக் கண்ணாடியின் மீது படும் தீய சக்திகளை அது அப்படியே திருப்பி விடும் ஆற்றலை உடையது.

ஃபெங் சுங்கில் பயன்படுத்தப்படும் பாகுவா கண்ணாடி மூன்று வகைப்படும். ப்ளெயின் (Plane), கான்கேவ் (concave), கான்வெக்ஸ் (Convex) ஆகியனவாகும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு.

இதையும் படியுங்கள்:
மன்னிப்பு எனும் மாமருந்தின் அளவற்ற நன்மைகளை அறிந்து கொள்வோம்!
Place the Chinese 'Bagua mirror' at the door of the house

ப்ளெயின் கண்ணாடியில், கண்ணாடி அக்டோகன் வடிவத்திற்கு உள்ளே வைக்கப்பட்டிருக்கும். கான்வெக்ஸ் கண்ணாடியை பரிந்துரையின்றி வீட்டில் மாட்டக் கூடாது. கான்கேவ் கண்ணாடி வீட்டிற்கு வரும் தீய சக்திகளை தன்னுள் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும். இதை பிஸ்னஸ் செய்யும் இடங்களில் மாட்டுவது நல்லது என்று கூறப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட பாகுவா கண்ணாடிகளை வீட்டில் மாட்டக்கூடாது. இந்த கண்ணாடியை வீட்டில் மாட்டுவதற்கான சிறந்த நேரம் மதியம் 12 மணி ஆகும். அதுவே Yin Yang சக்தி அதிகமாக இருக்கக்கூடிய நேரமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com