பிரதோஷ வகைகளும், நந்தி பகவானுக்கு காப்பரிசி நிவேதனமும்!

பிரதோஷம்
Prathosham

ந்தி சாயும் நேரத்தை பிரதோஷ காலம் என்று குறிப்பிடுகிறார்கள். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே, ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு உகந்த நேரம் இந்த பிரதோஷ நேரம்தான். இன்று பிரதோஷம். பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட, எண்ணியது அனைத்தும் ஈடேறும். பிரதோஷத்தில் நித்திய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என 20 வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

நித்திய பிரதோஷம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை 4.30 முதல் 7 மணி வரை உள்ள காலமாகும். ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்திற்கும் ஒரு விசேஷ பலன் உண்டு. திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்த ‘சோமவார பிரதோஷ’ தினத்தில் சிவபெருமானை வழிபட, சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் உண்டாகும். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று சிவ தரிசனம் செய்து வழிபட சிறந்தது.

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷம் அன்று நந்தியுடன் கூடிய சிவபெருமானை வழிபட சூரிய பகவானின் அருள் கூடும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை, ‘ருண ரோக விமோசன பிரதோஷம்’ என்று அழைப்பார்கள். அன்று ஈசனை வழிபட கடன் தொல்லை மற்றும் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம்.

புதன் கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் சிவபெருமானை தரிசிக்க, கல்வி சிறக்கும், அறிவு வளரும், கலைகளிலும் சிறந்து விளங்கலாம்.

குரு தசை நடப்பவர்கள், குரு பகவானை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் ஈசனை வழிபட, கிரக தோஷத்தால் ஏற்படும் தீமைகள் நீங்கும். குரு பலம் கூடும்.

வெள்ளிக்கிழமைகளில் வரும்  பிரதோஷத்தில் சிவபெருமானையும் நந்தியையும் வழிபட உறவு பலப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

இதையும் படியுங்கள்:
‘டம்பப்பை’ எனப்படும் பெண்களின் கைப்பையின் (Hand bag) வரலாறு தெரியுமா?
பிரதோஷம்

சனி பிரதோஷம், ‘மகா பிரதோஷம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. மகத்துவம் வாய்ந்த சனி பிரதோஷத்தில் ஈசனை வழிபட, கிரக தோஷத்தால் ஏற்படும் தீமைகள் அனைத்தும் குறையும். பஞ்சமா பாவங்களும் தீரும்.

பிரதோஷ நேரத்தில் காப்பரிசி, வன்னி இலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கு இடையில் அர்ப்பணித்து விளக்கேற்றி நந்தியையும், சிவபெருமானையும் வணங்க சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும்.

பச்சரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஊற விட்டு பிறகு நீரை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப் பூ சேர்த்து தயாரிக்கப்படுவதே ‘காப்பர்சி’யாகும். இதனை நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வமாலை சாத்தி நிவேதிக்க சகல நன்மைகளையும் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com