
தண்ணீர் என்பது நம் அனைவருக்குமே தேவையான ஒன்றாகும். இந்த உலகம் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. அத்தகைய தண்ணீர் நம் வீட்டில் Leak ஆவது எத்தகைய பிரச்னைகளைத் தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.
தண்ணீரை சனீஸ்வர பகவானுடன் ஒப்பிடுவார்கள். தண்ணீர் சனீஸ்வரரின் அம்சம் பெற்றதாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. தண்ணீர் மட்டுமே எல்லாப் பொருட்களில் இருக்கும் தோஷத்தை நீக்கக்கூடிய சக்திப் பெற்றதாக சொல்லப்படுகிறது. எல்லா மதங்களிலுமே பொதுவாக இருக்கக்கூடிய புனிதப் பொருளாக தண்ணீர் கருதப்படுகிறது. அத்தகைய புனிதம் வாய்ந்த நீர் நம்முடைய வீட்டில் குழாயில் இருந்து Leak ஆவதால் எதுப்போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
நம் வீட்டில் தண்ணீரை பொதுவாக கிச்சனில் தான் அதிகம் பயன்படுத்துவோம் என்பதால் குழாயில் இருந்து கசிவதும் அங்கே தான் அதிகமாக இருக்கும். இவ்வாறு தண்ணீர் கசிவதால் பாசிப்பிடித்து அதன் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக வீட்டில் கசியும் குழாய் இருந்தால் சனியால் நிறைய பிரச்னைகள் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. தண்ணீர் என்பது சனீஸ்வர பகவானின் அம்சம் பெற்றது என்று சொல்லப்படுவதால், அதை நாம் அலட்சியம் செய்யும் போது சனிப்பெயர்ச்சியின் போது சனியின் தாக்கம் மோசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
நம் வீட்டில் தண்ணீர் எந்நேரமும் கசிந்துக் கொண்டேயிருந்தால் தேவையில்லாமல் பண விரயம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். இதனால் வீட்டில் பணம் தங்காது. மேலும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும்.
தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை சேமிப்பது மிகவும் அவசியமாகும். இந்தியாவில் தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ள மாநிலமாக அசாம் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ள மாவட்டம் ராமநாதபுரம், சிவகங்கை ஆகும்.
எனவே, தண்ணீரை முடிந்த அளவு வீணாக்காமல் சேமிப்பது நம் எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக அமையும். சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தண்ணீரின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதை சேமிப்பது நம் வீட்டையும், நாட்டையும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். முயற்சித்துப் பாருங்கள்.