

பூரி ஜகன்னாதர் கோவில், தெற்கு வாசலில் சங்கிலியால் கட்டப்பட்ட ஆஞ்சனேயரைக் காணலாம். தெற்கு வாசலில் அமைந்துள்ள இச்சிலையைப்பற்றி ஒரு புராணக்கதை கூற்படுகிறது. பண்டைய காலங்களில் கோவிலுக்கு அருகில் கடல் இருந்ததால் ஊரில் கடல் அலைகள் அடிக்கடி கோவில் வளாகத்திற்குள் புகுந்துவிடும். இதனால் எப்போதும் அப்பகுதியில் வெள்ள அபாயம் இருந்தது இதனால் பக்தர்கள் சிரமத்தை அனுபவித்தனர்.
ஒருநாள் வருணபகவான் ஜகன்னாதரை தரிசிக்க விரும்பி பூரிக்கு வந்தார். அதன் விளைவாக கடல் பொங்கி எழுந்தது நகரமே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இனி கடல்நீர் கோவிலுக்குள் வராமலிருக்க அதைத் தடுக்க யாராவது தடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர்.
அப்போது பூரி ஜகன்னாதர் இலங்கைக்குச் சென்று சீதையைத் தேடுவதற்காக ஒரே தாவலில் சமுத்திரத்தை கடந்த மகாவீரரான ஆஞ்சநேயரை நினைத்தார். பெருமாளின் கட்டளையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஆஞ்சனேயர் கடலைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றார்இதனால் மக்களும் நிம்மதியடைந்தனர்.
ஆனால் சில நாட்கள் கழித்து ஆஞ்சனேயர் மனமுடைந்து காணப்பட்டார். அதற்குக் காரணம் அவருக்குப் படைக்கப்பட்ட உணவுதான். அந்தக் காலத்தில் ஜகன்னாதருக்கு நைவேத்தியமாக கிச்சடி அதாவது அரிசி மற்றும் பருப்பால் சேர்க்கப்பட்ட உணவே சமர்ப்பிக்கப்பட்டது. அதையே ஆஞ்சனேயருக்கும் வழங்கினர். அயோத்தியில் பலவிதமான உணவுகளை அனுபவித்திருந்த ஆஞ்சனேயருக்கு தினமும் ஒரே உணவை உண்பது சலிப்பை ஏற்படுத்தியது. ஒருநாள் இரவு அயோத்திக்குச் சென்று விதம் விதமான உணவை உண்டுவிட்டு வரலாம் என்று எண்ணி புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் அவர் இல்லாத நேரத்தில் கடல் மீண்டும் நகருக்குள் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆஞ்சனேயர் இங்கு இல்லாததுதான் இதற்குக் காரணம் என்பதை அறிந்தனர்.
ஜகன்னாதர் இனி ஆஞ்சனேயர் எங்கு செல்ல முடியாதபடிக்கு சங்கிலியால் கட்டிவிடுங்கள் என்று உத்தரவிட்டார்.
ஆஞ்சனேயரும் தன் தவறைப் புரிந்துகொண்டு சங்கிலியால் கட்டுப்பட சம்மதித்தார். அந்தச் சங்கிலியில் ஒவ்வொரு வளையத்தில் ராம் நாமம் பொரிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இங்குள்ள அனுமான் பேட் அனுமன் மற்றும் தரியா மகாவீர் என்று அழைக்கப்படுகிறார்.
அதன் பிறகு அனுமன் ஜகன்னாதரிடம் தினமும் ஒரேவிதமான உணவு வழங்கப்படுவதால் தான் அயோத்திக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூற அதைப் புரிந்துகொண்ட பெருமாள் ஆஞ்சனேயருக்காக பலவித உணவுகள் நைவேத்தியமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். அதற்குப் பிறகு மகிழ்ச்சியுடன் கடல் கண்காணிக்கும் வேலையை செய்து அனுமான் காவல் தெய்வமாக செயல்பட்டு வருகிறார்.
அவர் காவலுக்கு வந்ததிலிருந்து கடலலைகள் பூரிக்கு வந்து தொல்லை செய்வதில்லை. இன்றும் பூரிக்ஷேத்திரத்தின் காவல் தெய்வமாக ஆஞ்சனேயர் விளங்குகிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஏன் 56 உணவுகள்?
பூரியில் பெருமாளுக்கு நைவேத்தியமாக 56 உணவுகள் படைக்கிறார்கள். இதை சப்பன் போக் என்று கூறுகிறார்கள். புராணத்தின்படி கிருஷ்ணன் தன் குழந்தை பருவத்தில் ஒருநாளைக்கு எட்டு வேளை உணவு உண்டு வந்தார். கோவர்த்தன மலையை தூக்கி பிருந்தாவன் மக்களை ஏழுநாட்கள் பெருமழையிலிருந்து பாதுகாத்த பிறகு அவர் 56 வேளை உணவைத் (7நாட்கள் மற்றும் 8 வேளை) அதாவது 56 வேளை உணவை பக்தர்கள் கிருஷ்ணரின் அவதாரமான ஜகன்னாதருக்கு தினமும் 56போகம் படைக்கிறார்கள்.
இதில் முக்கிய போக் சிலவற்றைப் பார்ப்போம்;
கோபால் பல்லப் போக்
இது அதிகாலையில் பரிமாறப்படும் பழங்கள் இனிப்புகள் பால் நிறைந்த பொருட்கள் இருக்கும்.
சகல தூபம்
பல்வேறு சாதி வகைகள்,பருப்பு மற்றும் காய்கறிகள் அடங்கியது.
மத்தியன்ஹா தூபா
சாதம் பருப்பு குழம்பு மற்றும் இனிப்பு வகைகள்.
சந்தியா கூபா
சிற்றுண்டிகள் மற்றும் இனிப்பு.
படா சிங்காரா போக்
இரவில் தாமதமாக படைக்கப்படும் பால் பழம் மற்றும் சிற்றுண்டிகள்.
பாலா பாட்டா
புளிக்கவைக்கப்பட்ட அரிசி தயிர் மற்றும் பச்சைமிளகாய் வா இவற்றுடன் தயாரிக்கப்படுவது.
டால்மா
பருப்பு காய்கள் சேர்ந்த உணவு.
கட்டா
புளிப்பு இனிப்பு கலந்த சட்னி.
பிதா
தேங்காய் அரிசிமாவிலிருந்து தயாரிக்கப்படும் கேக் அல்லது தோசைகள்.
மால்புவா
மாவு பால் சீனிகொண்டு செய்யப்படும் அப்பம்.
இங்கு தயாரிக்கப்படும் 56பிரசாதங்கள் பக்தி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையாகும்.
இந்த ஆன்மீகத் தொகுப்பின் வாயிலாக, பூரி திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் பின்னே மறைந்துள்ள அரிய வழிபாட்டு ரகசியங்களையும் மிகத் துல்லியமாக அறிந்து கொள்வதுடன், உங்கள் அடுத்த ஆன்மீகப் பயணத்தை ஆழமான புரிதலோடு திட்டமிடும் தெளிவைப் பெறலாம்.