ராகுகால துர்கை வழிபாட்டுப் பலன்கள்!

Rahukala Durga Worship Benefits
Rahukala Durga Worship Benefits
Published on

சுப காரியங்கள் எதையும் ராகுகால நேரத்தில் செய்யக் கூடாது என்பது பெரியோர்களின் வாக்கு. ஆனால், ராகுகாலம் என்பது அம்பிகை வழிபாட்டுக்கு உரிய நேரம். இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவதால் பல்வேறு நலன்களைப் பெறலாம். பொதுவாக, மற்ற கிரகங்களின் ஆற்றல் இந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகுகாலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கக் கூறினார்கள் பெரியோர்கள். அதேசமயம், ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்கிறது தேவி பாகவதம். வாரத்தின் ஏழு நாட்களிலும் வரும் ராகுகால நேரத்தில் துர்கைக்கு விதவிதமான தீபம் ஏற்றி நிவேதனம் செய்து வழிபடுவதால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.

ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமை துர்கை சன்னிதியில் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி அனைத்து நலன்களும் உண்டாகும்.

திங்கள்: திங்கட்கிழமைகளில் காலை 7.30 முதல 9 மணிக்குள் துர்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய்கள் நீங்கும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய்: இன்று ராகுகால நேரமான மாலை 3.00 முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலம் கூடுவதோடு, குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

புதன்: இன்று மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும். இரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல் 3 மணிக்குள் துர்கை சன்னிதியில் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
முப்பெரும் தெய்வ ஸ்வரூப ஸ்ரீ தத்தாத்ரேய பெருமான்!
Rahukala Durga Worship Benefits

வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் துர்கையை வழிபட, மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

சனி: இன்று காலை 9 முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை துர்கைக்கு நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com