யாருக்கெல்லாம் மறுபிறவியே கிடையாது?

Reincarnation
Reincarnation
Published on

சிலர் வாழ்க்கையில் கஷ்டத்தையும், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். 'மறுபிறவியே வேண்டாம்' என்று நினைக்கும் அளவிற்கு இந்த பிறவியில் சிரமங்கள் இருக்கும். என்ன செய்தால் மறுபிறவி இல்லாத வாழ்க்கை கிடைக்கும் என்பதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

'இறப்பு என்பது முடிவல்ல தொடக்கம்' என்று சொல்வார்கள். சில மதத்தில் மறுபிறவி (Reincarnation) என்பது கிடையாது. இறந்த பிறகு உயிர்த்தெழுவோம் என்று சொல்கிறார்கள். அதற்காக சில குறிப்பிட்ட முறையில் இறந்தவர்கள் உடலை பாதுகாப்பாக பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கிருஸ்துவத்தில் உயிர்த்தெழுவது என்றும், இந்துக்கள் மறுபிறவி என்றும் சொல்கிறார்கள்.

இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் காரியத்தின் பலனை ஒவ்வொரு விதமாக நாம் பெறுகிறோம். நல்ல விஷயங்கள் செய்தால் நல்ல பலனையும், கெட்ட விஷயங்கள் செய்தால் கெட்ட பலனையும் பெறுகிறோம். வாழ்க்கையில் அடுத்த பிறவி என்பதே வேண்டாம் என்று துன்பம் அனுபவித்தவர்கள் நினைப்பார்கள். 

கருடப்புராணத்தில் மறுபிறவி யாருக்கெல்லாம் கிடையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் கர்மவினை இருக்கும். அதை முழுமையாக அனுபவித்து விட்டால் அவர்களுக்கு மறுபிறவி கிடையாது. மனிதராக பிறந்தவர்கள் எதன் மீதும் ஆசை, பொறாமை இல்லாமல் பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கிடைப்பதையும் இழப்பதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் போது, மறுபிறவியே கிடையாது என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஏழு விதமான பிறவிகள் இருப்பதாக சொல்கிறார்கள். தாவரம், நீர்வாழ் உயிரினம், ஊர்வன, பறவைகள், விலங்குகள், மனிதன், தேவர்கள் என்று சொல்கிறார்கள். இந்த ஒவ்வொரு நிலையையும் கடந்து மனிதப்பிறவி வருகிறோம். அந்த மனிதப்பிறவியில் நம் கரும வினைகளை முழுமையாக பெற்றுவிட்டோம் என்றால் மறுபிறவி இருக்காது.

  • அடுத்த ஜென்மம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் எதுபோன்ற விஷயங்கள் செய்ய வேண்டும்?

  • நமக்கு ஒரு துன்பம் வந்தால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

  • சாதித்த விஷயத்தை பெருமையாக பேசக்கூடாது.

  • மற்றவர்கள் மனம் நோகும்படி அதை வெளிக்காட்டக் கூடாது.

  • முடிந்த அளவிற்கு யாருக்கும் சொல்லாலும், செயலாலும் எந்த ஒரு துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடாது.

இதையும் படியுங்கள்:
தீபாவளி முதல் கந்த சஷ்டி விழா வரை அக்டோபர் மாதத்தில் வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
Reincarnation
  • தர்மக்காரியங்கள் அதிகமாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிகமாக தான தர்மங்கள் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்யும் போது இந்த பிறவி சிறந்த பிறவியாக உருவாக்கப்பட்டு அடுத்த பிறவி (Reincarnation) இல்லாத நிலை உண்டாகும்.

  • உங்களுக்கு பிடித்த தெய்வத்திடம் முழுபக்தியோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு இருக்கும் போது நம் கர்மவினைகள் கழிந்து அடுத்தபிறவி இல்லாத நிலை கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com