
அக்டோபர் 1-ம்தேதி: வளர்பிறை நவமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, திருப்பதி ஏழுமலையப்பன் ரதோற்சவம்
அக்டோபர் 2-ம்தேதி: வளர்பிறை தசமி, விஜய தசமி, திருவோண விரதம், கரிநாள், காந்தி ஜெயந்தி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம், மைசூரு தசரா ஊர்வலம், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நல்ல நாள்.
அக்டோபர் 3-ம்தேதி: வளர்பிறை ஏகாதசி (சர்வ ஏகாதசி), துளசி கௌரீ விரதம்.
அக்டோபர் 4-ம்தேதி: வளர்பிறை துவாதசி, சனிப்பிரதோஷம், சிவபெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
அக்டோபர் 5-ம்தேதி: வளர்பிறை திரயோதசி, வள்ளலார் தோற்றம், தானபல விரதம்.
அக்டோபர் 6-ம்தேதி: வளர்பிறை சதுர்த்தசி, பௌர்ணமி, கோமதி பூஜை, சந்தன கோபால விரதம், திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
அக்டோபர் 7-ம்தேதி: இன்று வரை பௌர்ணமி உள்ளது. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
அக்டோபர் 8-ம்தேதி: தேய்பிறை பிரதமை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
அக்டோபர் 9-ம்தேதி: தேய்பிறை திரிதியை, சந்தோரய கௌரி விரதம்.
அக்டோபர் 10-ம்தேதி: தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம்.
அக்டோபர் 11-ம்தேதி: தேய்பிறை பஞ்சமி, இன்று கருட தரிசனம் நன்று.
அக்டோபர் 12-ம்தேதி: தேய்பிறை சஷ்டி, முருகப்பெருமானுக்கு விரதம் இருக்க உகந்த நாள், கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று.
அக்டோபர் 13-ம்தேதி: தேய்பிறை சப்தமி, கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு அலங்காரத் திருமஞ்சன சேவை.
அக்டோபர் 14-ம்தேதி: தேய்பிறை அஷ்டமி, சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
அக்டோபர் 15-ம்தேதி: தேய்பிறை நவமி, கரிநாள்,
அக்டோபர் 16-ம்தேதி: தேய்பிறை தசமி, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்த வைரவேல் தரிசனம்.
அக்டோபர் 17-ம்தேதி: தேய்பிறை ஏகாதசி (சர்வ ஏகாதசி), பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
அக்டோபர் 18-ம்தேதி: தேய்பிறை துவாதசி, சனிப்பிரதோஷம், சிவபெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
அக்டோபர் 19-ம்தேதி: தேய்பிறை திரியோதசி, சுபமுகூர்த்த நாள், மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி ஸ்நானம்.
அக்டோபர் 20-ம்தேதி: தேய்பிறை சதுர்த்தசி, தீபாவளி பண்டிகை, சுபமுகூர்த்த நாள்.
அக்டோபர் 21-ம்தேதி: சர்வ அமாவாசை, கேதார கௌரீ விரதம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்.
அக்டோபர் 22-ம்தேதி: வளர்பிறை பிரதமை, சகல சுப்பிரமணிய ஸ்தலங்களில் கந்த சஷ்டி விழா ஆரம்பம்.
அக்டோபர் 23-ம்தேதி: வளர்பிறை துவிதியை, சந்திர தரிசனம் நன்று, கரிநாள்.
அக்டோபர் 24-ம்தேதி: வளர்பிறை திரிதியை, சுபமுகூர்த்த நாள், திரிலோசனஜீரக கௌரி விரதம்.
அக்டோபர் 25-ம்தேதி: வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம்.
அக்டோபர் 26-ம்தேதி: வளர்பிறை பஞ்சமி, வாராகி அம்மனை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
அக்டோபர் 27-ம்தேதி: வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சஷ்டி விரதம், சகல முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா.
அக்டோபர் 28-ம்தேதி : வளர்பிறை சப்தமி, வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று), முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்.
அக்டோபர் 29-ம்தேதி: வளர்பிறை அஷ்டமி, திருவோண விரதம், கோஷ்டாஷ்டமி.
அக்டோபர் 30-ம்தேதி : வளர்பிறை நவமி, திரேதயுகாதி, அக்ஷ்ய நவமி.
அக்டோபர் 31-ம்தேதி : வளர்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள், கள்ளழகர் தைலக்காப்பு உற்சவம்.