
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது சரியான முறையில் வழிபட வேண்டியது அவசியமாகும். சிலருக்கு வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறிவிடும். ஆனால், இன்னும் சிலருக்கோ எவ்வளவு வேண்டிக்கொண்டாலும் கஷ்டங்கள் தீராமல் தொடரும். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட ஒரு முறை இருக்கிறது. அந்த முறையை சரியாக பின்பற்றினால் மட்டுமே இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும். இதை அறியாமல் எடுத்ததுமே சுவாமி சன்னதிக்கு சென்று, 'எனக்கு அதை கொடு, இதை கொடு' என்று சிலர் தங்கள் குறைகளைக் கூறி புலம்புவார்கள்.
முதலில் இறைவனை கண்ணார தரிசித்து, அவரது நாமத்தை வாயார உச்சரித்து, கோவில் பிரஹாரத்தை சுற்றி வலம் வந்து கொடி மரத்தின் முன் வணங்கி பின் அமைதியாக அமர்ந்து மனதார வேண்டுதல்களை வைக்க வேண்டும். இதுவே இறைவனை வேண்டும் சரியான முறையாகும்.
சிலர் தங்கள் வேண்டுலை வைக்கும் போது தெரியாமல் தவறு செய்கிறார்கள். 'நான் வறுமையில் இருக்கிறேன், வீடு இல்லை, திருமணம் நடைப்பெறவில்லை, உடல்நலம் சரியில்லை' என்று எல்லாவற்றையும் எதிர்மறையாகவே சொல்லி புலம்புவார்கள். இவ்வாறு புலம்பும் போது இறைவன் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசி வழங்குவார். இதனால் நம் கஷ்டங்களும் தீராமல் தொடரும்.
அதற்கு பதில் நேர்மறையான எண்ணங்களுடன் இறைவனிடம் சரணாகதியடையுங்கள். 'இறைவா! நீ எனக்கு சொந்த வீடு, நல்ல பிள்ளைகள், ஆரோக்கியமான உடல்நிலை எல்லாம் தந்தருள வேண்டும். என்னுடைய திருமணம் விரைவில் நடக்கும், கடன் அடைப்படும்' என்று நம்பிக்கையுடன் வேண்டுங்கள்.
இப்படி நேர்மறை எண்ணங்களோடு இறைவனை முழுமனதோடு நம்பிக்கையோடு வணங்கினால், நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. இனி கோவிலுக்கு செல்லும் போது இந்த வழிபாட்டை பின்பற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள்.