சகாதேவன் பக்தியால் கிருஷ்ணரை கட்டிய நாள்: மகாபாரதம் சொல்லும் தர்மப் பாடம்!

ஜோதிட ஞானம், பக்தி, தர்மம் இணையும் சகாதேவன்-கிருஷ்ணர் சம்பாஷணம்; மகாபாரதம் சொல்லும் உள்நிலைப் பாடங்கள்
lord-krishna
lord-krishnaImage credit - indus-meetindus.blogspot.com
Updated on

பாண்டவர்களில் ஐந்தாவதாக பிறந்தவர். சகாதேவன் அஸ்வினி தேவர்களின் அருளோடு பிறந்தவர். இவர் ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியவர். இதன் காரணமாகவே அவருக்கு வாழ்வில் நடக்கவிருக்கும் அனைத்தும் முன்கூட்டியே தெரியும்.

மகாபாரத யுத்தத்தையும் அவர் முன்கூட்டியே எப்பொழுது நடக்கும் என்று கணித்திருந்தார். மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு முன் கிருஷ்ணர் அமைதி தூதுவனாக ஆஸ்தினாபுரம் செல்ல இருந்தார். அப்பொழுது கிருஷ்ணர் சகாதேவனிடம் நீயே அனைத்து ஜோதிட சாஸ்திரங்களிலும் சிறந்தவன் ஆவாய். இப்போரை நிறுத்த வழி இருக்கிறதா என்று கேட்டார்.

சகாதேவன் அப்பொழுது கிருஷ்ணரை பார்த்து இந்த மாபெரும் யுத்தத்தை தடுக்கவேண்டும் என்றால் அர்ஜுனனுடைய காண்டிவத்தை உடைத்தெரிய வேண்டும். பீமனின் கதாயுதத்தை இரண்டாக உடைத் தெரியவேண்டும். இல்லை என்றால் பாஞ்சாலியின் விரிந்த கூந்தலை அறுத்தெறிந்து, பாண்டவர்களின் மூத்தவனாக கர்ணன் என்ற உண்மையை கூறி அவனுக்கு முடிசூட்ட வேண்டும். கர்ணனுக்கு முடி சூட்டினால் முதலில் சந்தோசம் அடைவது துரியோதனனே. இவ்வாறு செய்வதால் மகாபார யுத்தம் நடக்காது. சகாதேவன் முன்பே அறிந்திருந்தார். தர்மத்தை நிலை நாட்ட இப்போர் நடக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தது கிருஷ்ணரே.

இதையெல்லாம்விட ஒரு முக்கியமான உபாயம் யாதெனில் கௌரவர்களிடம் அமைதி தூதுவனாக செல்லும் உன்னை கட்டி போட்டாலே இந்த மாபெரும் யுத்தம் நடக்காது என்றான் சகாதேவன்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களை திருப்திபடுத்த முயற்சித்தால் தோல்வி தான் மிஞ்சும் – மகாபாரதம் தரும் பாடம்!
lord-krishna

கிருஷ்ணர் இதை கேட்டதும் புன்னகைத்துக்கொண்டே என்னை உன்னால் கட்டிபோட முடியுமா என்று கேட்டார் அதற்கு சாவாதேவன் நிச்சயம் முடியும் என்றான். உடனே கிருஷ்ணர் பல்லாயிர உருவங்கள் எடுத்து சகாதேவன் முன் தோன்றினார். இதனை பார்த்த சகாதேவன் தன் இருக்கைகளையும் கூப்பி வணங்கி கிருஷ்ணரின் விஸ்வரூப மந்திரத்தை கூற தொடங்கினான். அவன் மந்திரத்தை கூற கூற ஒவ்வொரு கிருஷ்ணனின் உருவமும் மறைந்து இறுதியில் உண்மையான ஒரே கிருஷ்ணர் வந்தார்.

உடனே சகாதேவன் தன்னுடைய மனதால் கிருஷ்ணரை அங்கேயே கட்டிப்போட்டான். கிருஷ்ணரால் அசையக் கூட முடியவில்லை. இதனை பார்த்த கிருஷ்ணர் நீ வென்றுவிட்டாய் பக்தியால் என்னை கட்டிப் போட முடியும் என்று நீ நிரூபித்துவிட்டாய்.

ஆனால் தர்மத்தை நிலை நாட்ட இந்த மகா யுத்தம் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்று கூறி தன்னை விடுவிக்க வேண்டும் என்று சகாதேவனிடம் கூறினார். சகாதேவன் கிருஷ்ணனின் ஆணைக்கிணங்க அவரை விடுவித்தார். சகாதேவனின் பக்தி மற்றும் அன்பினால் கிருஷ்ணர் திகைத்துப் போனார். இறைவனை அன்பினாலே அணுகமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com