Science and spiritual secrets
Science and spiritual secrets

மணிக்கட்டில் கயிறு கட்டுவது ஏன்? - அறிவியலும் ஆன்மீக ரகசியங்களும்!

Published on

ம்பில் பலர் கைகளில் காப்பு மற்றும் பலவித நிறங்களில் கயிறு கட்டிக்கொள்கிறாா்கள். சிலர் தாயத்தும் முழங்கைக்கு மேல் மற்றும் இடுப்பில் கட்டிக்கொள்வதும் உண்டு. கருப்பு, சிகப்பு, மஞ்சள், ஊதா, செந்தூரம், பச்சை, போன்ற பல நிறங்களில் கட்டிக்கொள்கிறாா்கள்.

சிலர் கடவுள் பக்தி காரணமாகவும், திருஷ்டி, பரிகாரம், மற்றும் விரதம் இருப்பது போன்ற காரணங்களுக்காகவும் கட்டிக்கொள்வதும் உண்டு. இவைகளின் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் சிலர் அறிந்திருக்க வாயப்பில்லை. இது வகையான கயிறுகள் கட்டிக் கொள்வதில் அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு.

நமது உடலில் பல்வேறு வகைகளில் பல இடங்களில் முடிச்சுகள் உள்ளன. அவைகளே உடம்பின் இயக்கத்தை சரிசெய்து ஒழுங்கு படுத்துகின்றன. அதில் முக்கியமான பகுதி மணிக்கட்டு. அந்த பகுதியில்தான் இதயத்தின் இயங்கும் தன்மை அடங்கி உள்ளது. அதனால்தான் நாடி பிடித்து பாா்க்கப்படுகிறது. நாடியானது நமது மனோநிலை மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அதனால்தான் மணிக்கட்டு பகுதியில் கயிறு, மற்றும் காப்பு கட்டப்படுகிறது. நாடியின் இயங்கும் தன்மையானது சீராகவும் அலைபாயாமலும் இருக்கும். சிலர் மந்திரித்து உருவேற்றி அவரவர் ராசிகளுக்கு ஏற்ப கயிறு கட்டிக் கொள்வதால் பலவித நன்மைகளை அடைவதாக நம்பிக்கை உள்ளது.

அந்த வகை காப்பு, கயிறு தாயத்து போன்றவைகளுக்கு மந்திர ஒலியின் அதிா்வுகளை ஈா்க்கும் சக்தியும் உள்ளது என்பதும் தொடர்ந்து வருகின்ற நம்பிக்கையாகும். இதுபோன்ற கயிறுகளை கட்டிக்கொண்டு சிலவகை மந்திரங்களையும் ஜபிக்கலாம் உதாரணத்திற்கு காயத்திரி மந்திரத்தை ஜபம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மர்மமான பிறப்பு முதல் தமிழ் இலக்கணம் வரை: அகத்திய முனிவர்: அறியப்படாத உண்மைகள்!
Science and spiritual secrets

இதுபோன்ற முடிகயிறுகளை குழந்தைகள் இடுப்பிலும் கட்டலாம், பொதுவாகவே முடி கயறு வகைகளை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். சிலர் கணுக்காலில் கருப்பு கயிறு அணிகிறாா்கள். பொதுவாக அரைஞான் கயிறு அவசியம் கட்டிக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த பதிவில் எந்தந்த ராசிக்காரர்கள் எந்த விதமான கலரில் கயிறு கட்டிக்கொள்ளலாம் என்பதைப் பாா்ப்போம்.

மேஷம்: சிகப்பு நிற கயிறு அணிவதால் அதிா்ஷ்டம் ஏற்படுவதோடு ஆன்மிக ஈடுபாடு அதிகம் உண்டாக வாயப்பு உண்டு.

ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம், ராசிக்குாியவர்கள் மஞ்சள் நிற கயிறு அணிவதால் சகல காாியமும் சித்தியாகும், சுபகாாிய தடைகள் விலகும், நினைத்த காாியம் கைகூடும்.

மிதுனம்: கன்னி: ராசிக்காரர்கள் புதனுக்குாிய பச்சை நிற கயிறு அணிவதால் புத்தி தெளிவு மற்றும் ஆத்ம பலம் கூடும், எதிா்மறை எண்ணங்கள் விலகும்.

இதையும் படியுங்கள்:
நரசிம்மரின் மூச்சுக்காற்றில் அசையும் தீபம்: ஒரு அதிசய தரிசனம்!
Science and spiritual secrets

சிம்மம்: ஆஞ்சநேயருக்கு உகந்த செந்துர கலர் கயிறு கட்டுவதால் செல்வாக்கு பெருகும். எதிலும் வெற்றியே வந்து சேரும்.

மகரம்: கும்பம்: ராசிக்காரர்கள் கருப்பு நிறகயிறு கட்டிக்கொள்ளலாம், ஆபத்துகள் விலகும் காாிய தடை விலகும்.

ஆக அவரவர் ராசிகளுக்கேற்ப முடிகயறு கட்டிக்கொண்டு இறை உணர்வு நோ்மறை சிந்தனை, நல்ல ஒழுக்கம், நல்ல எண்ணங்களுடன் வாழ்வோமாக!

logo
Kalki Online
kalkionline.com