செல்வத்தை மீட்டெடுத்த குபேரன்: அரிகேசநல்லூர் அரியநாதர் கோவிலின் அதிசயம்!

arikessanallur-shiva-temple
arikessanallur-shiva-temple
Updated on

ம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள அரிகேசநல்லூர் என்ற ஊரில் பெரியநாயகி சமேத அரியநாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு அரிதாக காணப்படும் குபேரன் சன்னதியும் ஜேஷ்டா தேவியின் சந்நிதியும் அமைந்திருக்கிறது. ஹரிகேச பாண்டியன் வயல்களின் நடுவே இயற்கை கொஞ்சம் சூழலில் ஆலயத்தை அமைத்துள்ளார்.

கோவிலின் தொன்மையே தனித்த கம்பீரத்தை கொடுக்கிறது ஆலயத்தின் முகப்பில் கோபுரம் ஏதுமில்லை உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் பலிபீடம் நந்தி அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகம கோவிலுக்கு உரிய சூரியன், சந்திரன் ஜுரதேவர் சப்த மாதர்கள் தட்சிணாமூர்த்தி பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகள் சன்னதிகளும் உள்ளது ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு இந்த ஆலயத்தில் உள்ளது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் இங்குள்ள இறைவன் அரிகேசரிநல்லூரிலுள்ள அரிகேசரி ஈஸ்வரமுடைய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த சிவாலயத்தை கட்டியதால் மன்னன் பெயரால் இந்த ஊர் அரிகேசரி நல்லூர் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர் இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி திகழ்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தி உள்ளார்.

தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிராக சப்த கன்னியர் சன்னதியில் வீரபத்திரர்க்கு பதிலாக ருருபைரவர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இந்த ருருபைரவரை மனமார தொழுதால் அஷ்டமா சித்திகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வெளிச்சுற்றில் தென்புறம் ஜேஷ்டா தேவியின் பெரிய உருவம் உள்ளது மாந்தன் மாந்தி ஆகியோரோடு காட்சி அளிக்கிறாள். வடக்கு சுற்றில் இறைவன் சன்னதிக்கு வடகிழக்கே அஷ்டதிக்கு பாலகர்களில் வடதிசைக்குரியவனும் சிவபெருமானின் நெருங்கிய நண்பருமான செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை ஒன்று காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக்கொண்டு சுமார் நான்கடி உயரத்தில் மிகப்பெரிய உருவத்துடன் குபேரன் காட்சி அளிக்கிறார் இங்கு குபேரன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஊரு ஒரு காலத்தில் அனகாபுரி என்ற பெயர் பெற்றிருந்ததாம் . ராவணன் தனது சகோதரன் குபேரனிடமிருந்து செல்வங்களை எல்லாம் பிடுங்கிக்கொண்டு அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக்கொண்டு துரத்தி அடித்தபோது அவர் அடிக்கடி வந்து விழுந்தாலும் அவர் வந்து விழுந்த இடம்தான் ஹரிகேசநல்லூர்.

இதையும் படியுங்கள்:
வாசல் கோலம் முதல் ஸ்வஸ்திக் வரை: இந்து தர்மத்தின் 8 புனித அடையாளங்களும் அவற்றின் ரகசியங்களும்!
arikessanallur-shiva-temple

ராவணனிடம் இழந்த செல்வத்தை மீட்டெடுக்க குபேரன் பூஜை செய்யப்பட்ட தலம்தான் அரிகேசநல்லூர் சிவபெருமான் ஹரிகேசநல்லூர் வந்து குபேரன் சிவபெருமானை பூஜை செய்து அவரின் அருளால் வளம் பெற்ற தலம். குபேரர் கையில் நாம் இரண்டு நாணயங்களாக அல்லது பணமாக வைத்து ஒன்றை நாம் எடுத்து வந்து பீரோவில் வைத்து கொண்டால் பணம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

குபேரன் வணங்கிய சிவனை துளை உள்ள கல்பலகை வழியாக வழிபட்டு வேண்டிக்கொள்ளவேண்டும். சுமார் ஏழு அடி உயரமான இறைவியின் சிலை கலை நுணுக்கமும் வனப்பும் மிக்கது.

இந்த ஆலயத்திற்கு கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் உள்ளன. அட்சய திருதியன்று இந்த கோவிலுக்கு சென்று குபேரணையும் மீட்டெடுத்து தந்த சிவபெருமானையும் வணங்கி வந்தால் நமக்கும் குபேரன் சிவபெருமான் அருளால் சகல சம்பத்தும் குபேர அளவு செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் இந்த ஆலயம் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com