
நமது வீடுகளில் பூஜை அறையில் காலை, மாலை இரு வேளையும் தீபம் ஏற்றுவது நடைமுறை. அவ்வாறு தீபம் ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் நிறைய உள்ளன. தீபத்தைப் பொறுத்தவரை மணல் (அகல்), மாக்கல், போன்றவற்றால் தயாா் செய்யப்பட்ட அகல் விளக்கை பயன்படுத்துவதே சிறந்தது.
சிலர் வசதிக்கேற்ப பித்தளை, வெள்ளியில் அகல் விளக்கு ஏற்றுவாா்கள். பொிய விசேஷங்களுக்கு உயரமான பித்தளை, வெண்கலம் மற்றும் வெள்ளி விளக்கைப் பயன்படுத்துவாா்கள். ஆனால், எவர் சில்வரால் ஆன விளக்கை எந்த பூஜைக்கும் உபயோகிக்கவே கூடாது.
எந்த விளக்கிலும் இரண்டு திாியை முறுக்கிபோட்டு தீபம் ஏற்றுவது உசிதம். எமனுடைய திசை தெற்கு என்பதால் அந்த திசை மட்டும் தவிா்க்கப்படுதல் சுபமானது.
புதிய மஞ்சள் துணி திாி போட்டு விளக்கேற்றினால் எதிா்மறை சக்திகள் நம்மிடம் வராது. பஞ்சு திாி போட்டு விளக்கேற்றினால் சர்வ மங்கலமும் உண்டாகும். வாழைத்தண்டு திாி தயாா் செய்து போட்டு தீபம் ஏற்றிட, புத்திர பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நல்லெண்ணைய் விட்டு தீபம் ஏற்றிட எம பயம் நீங்கும்.
தாமரைத் தண்டில் திாி தயாா் செய்து தீபம் ஏற்றினால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். தேங்காய் மற்றும் இலுப்பை எண்ணையில் தீபம் ஏற்றினால் தேக ஆரோக்கியம் பெருகிட வாய்ப்புகள் அதிகம்.
இரவில் ஒரு பித்தளைப் பாத்திரத்தில் சுத்தமான ஜலத்தை பூஜை அறையில் தினசாி வைக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் இறைவனை வழிபட எப்போதும் வெண்கல விளக்கு மற்றும் அகல் விளக்கே மிகவும் உகந்தது. இதனை நாம் கடைபிடித்து தீபம் ஏற்றுவோம், கடவுளின் அருளைப் பெறுவோம்!