கல்வி முதல் செல்வம் வரை: உங்கள் ராசிக்கு எந்த சிவலிங்கம் ஏற்றது?

Shiva Linga Worship
Shiva Linga Worship
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிவலிங்க வழிபாடு மன அமைதி, செல்வம், நீண்ட ஆயுள் மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்கும் சக்தி வாய்ந்த வழிபாடாகும். பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். தினமும் அல்லது பிரதோஷ நாட்களிலாவது சிவலிங்க பூஜை செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்வையும், எதிர்ப்புகள் நீங்கி வெற்றியையும் அளிக்கும்.

பஞ்சகவ்ய அபிஷேகம்:

பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் இணைந்த பஞ்ச கவ்யத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பாவங்கள் நீங்கும். சுத்தமான நீர் கொண்டு அபிஷேகம் செய்ய நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும்.

ஏழு வகையான லிங்கங்கள்:

7 வகையான சிவலிங்கங்கள் உள்ளன. சுயம்புவாக தானாக உண்டான லிங்கங்கள், அம்பிகை வழிபட்டது, தேவர்கள் வழிப்பட்டது, மனிதர்கள் வழிபட்டது, அசுரர்கள் வழிபட்டது, ரிஷிகள் வழிபட்டது போன்று 7 வகையான லிங்கங்கள் உண்டு. இவற்றை முறைப்படி வழிபட இகபர சுகங்கள் அனைத்தும் கிட்டும். ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கூடிவரும்.

இதையும் படியுங்கள்:
நிஜமான பக்திக்கு உருவம் தேவையில்லை - ஒரு குட்டப்பனின் கதை!
Shiva Linga Worship

சிவலிங்க பூஜையும் பலனும்:

கல்லினால் உண்டான லிங்கத்தை வழிபட ஆற்றல் கூடும். கல்வி கேள்விகளில் தேர்ச்சி உண்டாகும். ரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட லட்சுமி கடாட்சம் பெருகும்.

உலோகத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட துன்பங்கள் தீரும். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

பவள லிங்கத்தை வழிபட தீராத நோய் தீரும்.

மண்ணால் ஆன லிங்கத்தை வழிபட பூமி லாபம் கிடைக்கும். ஸ்படிக லிங்கத்தை வழிபட லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி கிடைக்கும். வில்வ இலையால் ஈசனை பூஜிக்க அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

இழந்த செல்வத்தை மீண்டும் பெற வழிபட வேண்டிய லிங்கங்கள்:

திருவையாறு, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு போன்றத் தலங்களில் உள்ள ஈசனை வழிபட இழந்த பதவி மற்றும் செல்வங்களை மீண்டும் பெறலாம். இம்மையிலும் மறுமையிலும் இகபர சுகங்கள் அனைத்தையும் பெறலாம்.

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய தலங்கள்:

முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், 2ஆம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், 3ஆம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், 4ஆம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசிக்க சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்றும், ராகு கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

logo
Kalki Online
kalkionline.com