Shiva temple full of surprises
Shiva temple full of surprises

ஆச்சரியம் நிறைந்த அமானுஷ்ய சிவன் கோயில்!

குஜராத் மாநிலம், பாவ் நகர் மாவட்டம், கோலியாக் கிராமத்தின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது நிஷ்கலங்க் மகாதேவ் சிவாலயம். நிஷ்கலங்க் என்றால், சுத்தமான, தூய்மையான, குற்றமற்ற, பரிசுத்தமான என்று பொருள். உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலையில் உள்ளது. இக்கோயில் நிர்மாணிக்கப்படும்போதே கடலுக்குள் கட்டப்பட்டதா அல்லது காலமாற்றத்தில் இது கடற்கரை கோயிலானதா என்பது இன்னும் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமை மிக்கது இந்தக் கோயில். ஆதலால் இது மகாபாரத காலத்துக்கும் முற்பட்டதாக அறியப்படுகிறது. போரில் உற்றார் உறவினர் என அனைவரையும் கொன்ற பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணரிடம் தங்கள் பாவம் தீர வழி கேட்க, அவர்களிடம் ஒரு கருப்பு கொடியையும், ஒரு கருப்பு பசுவையும் கொடுத்து, ‘இந்தக் கொடியை எடுத்துக்கொண்டு, பசுவை பின்பற்றிச் செல்லுங்கள். எங்கு இந்தக் கொடியும் பசுவும் வெள்ளையாக நிறம் மாறுகிறதே, அப்போது உங்கள் பாபம் தொலைந்தது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஈசனை நினைத்து தவம் செய்து பாப விமோசனம் பெறுங்கள்’ என்று கூறினார்.

அதன்படியே சென்ற பாண்டவர்கள், இந்தத் தலத்துக்கு வரும்போது கொடியும் பசுவும் வெள்ளை நிறமாக மாற அங்கேயே சிவபெருமானை நினைத்து தவமியற்றினர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லிங்க ரூபத்தில் காட்சி அளித்தாராம். அதன் பிறகு பஞ்சபாண்டவர்கள் ஐவரும் தனித்தனியாக ஒவ்வொரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டததாகத் தல புராணம் கூறுகிறது.

இக்கோயில் சிவபெருமானை தினமும் பகல் ஒரு மணியில் இருந்து இரவு பத்து மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் இக்கோயில் முழுவதும் கடலில் மூழ்கியே காணப்படும். அந்நேரங்களில் கடல் நீர் மட்டம் கோயில் கொடிமரத்தின் உச்சி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பகல் ஒரு மணி வரை கடலில் மூழ்கி இருக்கும் இக்கோயில், அதன் பிறகு படிப்படியாக கடல் நீர் மட்டம் குறைந்து பக்தர்கள் வழிபாட்டுக்காக வழிவிடுவது உலக ஆச்சரியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தினமும் இந்த அதிசயம் இக்கோயிலில் நிகழ்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
பல்லிகளை வழிபடும் பெருமாள் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?
Shiva temple full of surprises

பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக இந்த ஆலயத்தின் கருவறையில் ஐந்து சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன. இக்கோயிலில் அமைந்துள்ள கல் கொடி மரம் இதுவரை எத்தனையோ புயல்களை சந்தித்துள்ளது. ஆனாலும் எந்தவித சேதமும் இன்றி காட்சி தருவது ஆச்சரியம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com