உலகிலேயே மிகவும் பணக்கார கோவில் என்றால் அது மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில்தான். ஆண்டுதோறும் 100 மில்லியன் வருமானத்துக்கும் அதிகமாக கிடைக்கிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இக்கோவில் மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் பட தயாரிப்பாளர்கள் என அனைவரையும் ஈர்த்து வருகிறது. புதிய படங்கள் தொடங்குவதற்கு முன்பாக இந்த கோவிலில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மும்பை பிரபா தேவி பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. 1801 ஆம் ஆண்டு லக்ஷ்மன் விதுவால் இந்த கோவில் கட்டப்பட்டது. பின்னர் மும்பையை சேர்ந்த தியூபாய் பட்டேல் என்ற பணக்காரப் பெண்மணி தனக்கு குழந்தை வரம் வேண்டி வழிபட்டதால் குழந்தை வரம் கிட்டியது.
அதனால் அந்தப் பெண்மணி இந்தக் கோவிலுக்கு பெரிய தொகையை வழங்கி உள்ளார். 1950 இருந்து முக்கிய யாத்திரை தலமாக விளங்குகிறது. மக்களின் விருப்பங்கள் நிறைவேறுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களும் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும்.
பிரதான் நுழைவு வாயில், ஓய்வு இல்லம், குடியிருப்பு பகுதி, ஒரு ஏரி ஆகியவை அடங்கிய பகுதி ஆகும். இருபதாம் நூற்றாண்டில் அனுமன் சிலை நிறுவப்பட்டது. இங்குள்ள விநாயகர் தனித்துவமாக விளங்குகிறார். அவருக்கு சிவனைப் போன்று மூன்று கண்கள் உள்ளது சிறப்பு அம்சமாகும். துதிக்கை வலப்புறமாக அமைந்துள்ளது.
இந்த கோவில் ஆறு தளங்கள் கொண்டது. முதல் தளத்தில் மத பூஜைகள் நடைபெறுகிறது. இரண்டாவது தளத்தில் கோவில் சமையலறை பிரம்மாண்டமாக உள்ளது.
இங்கு சூரிய சக்தி மின் அடுப்பும் உள்ளது. இங்கு செய்யப்படும் உணவு வகைகள் லிப்ட் மூலம் கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மூன்றாவது தளத்தில் உறுப்பினர்கள் அறை மற்றும் அலுவலகம் செயல்படுகிறது. நான்காவது தளத்தில் 8000 நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளது அனைவரும் அமர்ந்து படிக்கக்கூடிய அளவில் வசதியாக உள்ளது. ஐந்தாவது தளத்தில் ஒரு பிரம்மாண்டமான சமையலறை உள்ளது. பண்டிகை காலங்களில் செயல்படும். ஆறாவது தளம் கோவிலின் உச்சிப் பகுதி.
இங்கு ஏராளமான கிரீடங்கள் பெரிய அளவில் குவி மாடம் உள்ளது. விநாயகர் சிலையை பார்க்க முடியாதவர்கள் குவி மாடத்தில் பிரார்த்தனை செய்து வழிபடுகிறார்கள். கோவிலில் சித்தி வாயில், ரித்தி வாயில் என இரண்டு வாயில்கள் உள்ளன. தாதர் ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடத்திலும் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
விஐபி கட்டணம், தரிசன கட்டணம், பொது தரிசனம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குழந்தை இல்லாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதால் அன்று மட்டும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
மற்ற நாட்களில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது முப்பது மணி வரை செயல்படும் . அருகிலேயே தாகர் கடற்கரை உள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறுவதால் இங்கு தினசரி கூட்டம் அலைமோதும்.