

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்திருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடிந்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும் பொதுவாக பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் போன்று வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். திருப்பதி போன்ற ஆலயங்களில் தங்கக் கவசம் போர்த்தியிருந்த இமாம்கள். இதன் மூலம் கருவறைகாகு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலிபீடத்துக்கு கொடுக்கப்படுவதை அறியலாம்.
பலிபீடம் என்றதும் 90சதவீதம் பேர் மனதில் ஆடு கோழி போன்றவைகளை பலி கொடுக்கும் இடம் என்ற எண்ணம் ஏற்படலாம். வேதகாலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித் தூதராகவும்,விலங்குகளை பலியிடும் மேடையாக இருந்தவைதான் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி இன்று கொடிமரமாகவும் பலிபீடமாகவும் வடிவெடுத்து உள்ளன என்று சொல்கிறார்கள்.
எனவேதான் பலிபீடம் பலிகொடுக்கும் இடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது இதை உறுதிப்படுத்துவது போல் இன்றும் கோவில் திருவிழாக்களில் ஆடு கோழிகளை பலிகொடுப்பதை பார்க்கலாம். இது தவறு.
ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும் வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாகவே கருதப்படுகிறது. அங்கு உயிர்கள் பலியிடப்படுவதில்லை. நம் மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள். அதெப்படி குணங்களை பலியிடுவது? கெட்ட குணத்துடன் கருவறை சென்றால் நமக்குக் கடவுள் எப்படி அருள் புரிவார்.
நம் மனது எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் பூதாகரமாக வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். எதுவும் இல்லாத எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவராக கடவுள் பக்கம் செல்ல முடியும். அதாவது நம் மனதில் உள்ள தீயஎண்ணங்களை பலி கொடுக்கவேண்டும்.
நம் மன அழுக்கு நீங்கினால் நாம் நல்ல மனிதர்களாக மாறிவிடுவேம். இத்தகைய மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடம் ஏற்படுத்தும் இடம்தான் பலி பீடம் இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. பலிபீடத்து உயரமும் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். பலிபீடத்தில் பாதுகா, குமுத பத்திகள், கலா கம்பம், நிதியம், சுகபோகம், அசுர பத்தி, பத்மம் என்று பலவகைகள் உள்ளன.
பலிபீடத்தின் அருகில் சென்றதும் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மதங்களையும் பலியிடுதல் வேண்டும். ஆலயத்தின் கருவறை வடக்கு மேற்கு திசையை பார்த்து இருந்தால் பலிபீடத்தின் இடது புறத்திலும், கருவறை கிழக்கு தெற்கு நோக்கி இருந்தால் வலது பக்கத்தில் நின்று வணங்கவேண்டும். மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதும் நைவைத்தியத்தின் போதும் பலி பீடத்தை வணங்கக் கூடாது. பலி பீடத்தை வணங்கியும் நமது மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்த மனநிலையில் கருவறை செல்லும்போது கடவுள் அருள் நம்மை ஆக்கிரமிக்கும்.
பொதுவாக கோவில்களில் ஈட்டு மூலைகளில் பலிபீடம் அமைக்கப்படுகிறது. அவை இந்திரன், எமன், அக்னி, திருத்தி, வருணன், வாயு, குபேரன், ஈசானம் என்ற எட்டு திக்பாலகர்களை உணர்த்தும் இந்த ஈட்டு இடங்களிலும்தான் ஒவ்வொரு கோவில் ஆகும். விதிகளின்படி பலிபீடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோவில்களில் பலிபீடத்தில் அன்னம் வைப்பது வழக்கம். அதை தெய்வம் சாப்பிடுவதாக ஐதீகம்.