
நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நம் குலதெய்வத்தின் அருள் கட்டாயம் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும். அதை சரியாக செய்ய தவறினாலோ அல்லது மறந்து விட்டாலோ குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குலதெய்வம் நம் குடும்பத்தின் மீது கோபமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நீங்கள் உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும் போது அங்கே செல்ல முடியாதப்படி தடங்கல்கள் ஏற்படும். அதையும் மீறி கோவிலுக்கு சென்றாலும் அங்கே பூஜை செய்ய முடியாதப்படி தடங்கல்கள் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும்.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து செல்ல வேண்டியது அவசியமாகும். ஆனால், உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் சிலர் உங்களோடு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவாகும்.
கனவில் குலதெய்வம் கோபமாக தோன்றுவது, தீயசக்திகள் கனவில் வருவது போன்ற கனவுகள் ஏற்படும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுவிட்டாலும், காலில் அடிப்படுவது, காயம் ஏற்படுவது போன்று ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்.
அதுவரைக்கும் நன்றாக இருந்திருக்கும் ஆனால் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்ததுமே வீட்டில் சண்டை, சச்சரவு என்று பிரச்னைகள் வர ஆரம்பிக்கும். கோவிலுக்கு சென்று வந்த பின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். உங்கள் வாழ்வில் தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னை வந்துக் கொண்டேயிருக்கும்.
இதுப்போல நடந்தால் நம் குலதெய்வம் கோபமாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இதை தவிர்க்க நம் வீட்டில் குலதெய்வத்திற்கு என்றே ஒரு விளக்கை ஏற்றி, 'நாங்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்கு எங்களை மன்னித்து உன் சன்னதிக்கு வந்து வழிப்பட அருள் புரியுங்கள்' என்று வழிப்படுங்கள்.
குலதெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று பஞ்சாங்க பூஜை செய்யலாம். குடும்பத்தில் ஒருதலைமுறை கூட தவறாமல் தொடர்ந்து குலதெய்வ வழிப்பாடு நடைப்பெற வேண்டும்.