
தென்கொரியா மற்றும் ஜப்பானில் தோன்றிய Urban legend விளையாட்டு தான் Elevator game ஆகும். இந்த விளையாட்டு திரிலிங் அனுபவத்தை விரும்பக்கூடிய இளைஞர்களால் உலகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டை விளையாடும் நபர் இதை சரியாக விளையாடி முடிக்கும் போது லிப்டின் மூலமாக வேறு ஒரு உலகத்திற்கு கூட்டிச் செல்லப்படுவார் என்பது நம்பிக்கை. பிளட்டி மேரி, கேன்டி மேன் போன்ற நிறைய அர்பன் லெஜன்ட் விளையாட்டுகளும் இந்த வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுவாரஸ்யமான விளையாட்டை பற்றிய தகவல்களும் அதை எப்படி விளையாடுவதை என்பதைப் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முதலில் 10 மாடிகள் கொண்ட லிப்ட் உள்ள கட்டிடத்தை தேர்வு செய்துக் கொள்ளவும். இந்த விளையாட்டை லிப்ட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனியாகவே விளையாட வேண்டும். எனவே, இரவு நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒரு த்ரில். முதலில் லிப்ட்டுக்குள் நுழைந்து அதில் உள்ள பட்டன்களை 4, 2, 6, 2, 10, 5 என்ற வரிசைப்படி அழுத்த வேண்டும்.
இந்த முறையை சரியாக நீங்கள் செய்திருந்தால், லிப்ட் ஐந்தாவது தளத்திற்கு செல்லும் போது ஒரு பெண்மணி லிப்ட்டினுள் வந்து ஏறுவார்! லிப்ட்டினுள் வந்த அந்த பெண்ணை பார்க்கக் கூடாது, அவரிடம் பேசக்கூடாது. அவரிடம் பேசினால் அங்கேயே மாட்டிக்கொள்ள வேண்டியது தான். இப்போது மறுபடியும் முதல் தளத்திற்கு செல்வதற்கு லிப்ட்டின் பட்டனை அழுத்த வேண்டும்.
இந்த விளையாட்டை நீங்கள் இதுவரை சரியாக விளையாடியிருந்தால், லிப்ட் உங்களை முதல் தளத்திற்கு அழைத்து செல்வதற்கு பதில் 10 ஆவது மாடிக்கு அழைத்து செல்லும். இப்போது லிப்ட்டின் கதவுகள் திறக்கும் போது நீங்கள் பார்க்கும் உலகம் நம் உலகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக மாறுப்பட்டு இருக்கும்.
இப்போது அந்த இடத்தில் இருந்து திரும்ப நம்முடைய உலகத்திற்கு வருவதற்கு இந்த விளையாட்டை தலைகீழாக விளையாட வேண்டும்.
இதுவரை இந்த Elevator game ஐ விளையாடியவர்கள் சிலர், அமானுஷ்யமாக உணர்ந்ததாக சொன்னாலும், இந்த விளையாட்டு உண்மை என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அமானுஷ்யம் மற்றும் திரிலிங் அனுபவத்தை விரும்பக்கூடிய இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் விளையாட உருவாக்கப்பட்ட விளையாட்டாகவே இந்த Elevator game விளையாட்டு கருதப்படுகிறது.