வாழ்வை மாற்றும் எளிய ஆன்மிகப் பரிகாரங்கள்!

spiritual-remedies
spiritual-remedies
Published on

ன்மிகத்தைப் பொறுத்தவரை சில பரிகாரங்கள் செய்யும் போது அதிலும் சாஸ்திரப்படி அவற்றைச் செய்யும்போது அவை உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அப்படிப்பட்ட சில பரிகாரங்கள் குறித்து காண்போம்

பொதுவாக நாம் நாளைத் தொடங்கும்போது ஏதாவது மந்திரத்தை ஜபித்த பிறகு ஒரு டம்பளர் இளநீர் குடித்தால் ஜெபித்த மந்திரத்தின் பலனை உடனடியாக பெற்றுவிடலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நவதானிய அடையை நல்லெண்ணெய் கொண்டு தயாரித்து சாப்பிட நவக்கிரகங்கள் திருப்தி அடையும். இதனால் அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி தாக்கம் குறையும்.

நம்முடைய கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல், சொந்தம், பந்தம் இவைகளை இழந்தவர்களுக்கு அன்னதானம் அளிப்பது மிகச் சிறந்ததாகும்.

உங்களது முன்னேற்றத்தைக் பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க உங்கள் வீட்டில் சாம்பிராணி புகை போடுவது நல்லது.

புதன் கிழமை அன்று உங்கள் வீட்டிலிருந்து பொன் பொருள் ஆடை இவற்றை எவருக்கும் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலக்ஷ்மி அடுத்தவரிடம் சென்று விடுவாள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

வெள்ளிக் கிழமை, செவ்வாய்க்கிழமை அன்று நெல், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பண்டத்தை இனாமாக தரக்கூடாது.

இதையும் படியுங்கள்:
உடல், உயிர், ஆன்மா... நெய் தேங்காய் உணர்த்தும் சரணாகதி தத்துவம் என்ன?
spiritual-remedies

உங்கள் பிரச்னைகள் நீங்க ஏதாவது பரிகாரம் செய்து வந்தால் தோலால் ஆன செருப்பு, பெல்ட், பர்ஸ் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்திவிடவும். இவைகளை அணிந்து பரிகாரம் செய்தால் அது பலிக்காது.

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்னைகள் உள்ளவர்கள் தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்குச் சென்று கொள்ளு தானம் செய்யவேண்டும்.

தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டில் தெளித்தால் பீடை நீங்கும். கணவனின் அன்பை முழுமையாக பெற மனைவி விசாக நட்சத்திரத்தில் முருகனையும் வெள்ளியையும் வழிபட வேண்டும்.

சுவாதி நட்சத்திரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கொடுத்தது திரும்பி வராது என்று நம்பப்படுகிறது

திருவோணம் அன்று விஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்து துவரம்பருப்பு பாயசம் செய்து அனைவர்க்கும் வழங்கினால் சொத்து வாங்கும் யோகம் அமையும்.

மற்றவர்களிடமிருந்து உதவியை சுலபமாகப்பெற மிருகசீரிஷ நட்சத்திரத்தில் முருகப் பெருமானை தரிசித்து உதவி கேட்க உதவி கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com