ஐயப்ப பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அறுபடை வீடு திருத்தலங்கள்!

Six houses of Lord Ayyappa
Swamy Ayyappan, Kalyana Sastha
Published on

மிழ் கடவுளான முருகப்பெருமானை போலவே தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அறுபடை வீடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஐயப்ப பக்தர்களே உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க...

1. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக சுவாமி ஐயப்பன் அமர்ந்து அருள்புகிறார்.

2. அச்சன்கோவில்: செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தக் கோயிலின் விக்ரகம் மட்டுமே பழைமை மாறாதது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களின் சபரிமலை: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பின்னணி ரகசியங்கள்!
Six houses of Lord Ayyappa

இங்கு வனராஜனாக அமர்ந்த கோலத்தில் கையில் அமுதமும் கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலா தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் ஏராளமானோர் இத்தல ஐயப்பனை வணங்கி வழிபட்டு பலன் பெற்றுச் செல்கின்றனர்.

3. குளத்துப்புழா: செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இக்கேயில். இங்கு சுவாமி ஐயப்பன் குழந்தை வடிவில் குடிகொண்டுள்ளதால், ‘பால சாஸ்தா‘ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தக் கோயில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

4. எரிமேலி: கேரளாவில் உள்ள இத்தலத்தில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

இதையும் படியுங்கள்:
சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது? கார்த்திகை தீபத்தின் பின்னால் இருக்கும் ரகசியம்!
Six houses of Lord Ayyappa

5. பந்தளம்: இந்தத் தலத்தில்தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோயில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாகக் கருதப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின்போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளது.

6. சபரிமலை: கேரளாவில் உள்ள இத்தலத்தில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின்முத்திரை தாங்கி கேட்பவர்களுக்கு கேட்ட வரம் வாரி வழங்கும் வள்ளலாகக் காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ஐயப்ப பக்தர்களே உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com