தீபாவளி திருநாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி அருளைப் பெற்றுத் தரும் சில பரிகாரங்கள்!

Diwali and Mahalakshmi grace
Diwali and Mahalakshmi grace
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

சிறியோர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ந்து கொண்டாடிக்கூடிய பண்டிகை என்றால் அது தீபாவளிதான். இத்திருநாளில் தீப ஒளியோடு மகாலக்ஷ்மி தாயாரை வணங்க வாழ்வு சிறக்கும் என்பது திண்ணம்.

தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, குளிக்கின்ற நீரில் சில துளிகள் தூய்மையான பசும்பால் விட்டு கலந்து பிறகு குளிப்பதால் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் நிறையும். நம்மை பீடித்திருக்கும் தரித்திரம் நீங்கும்.

தீபாவளி திருநாளில் வீட்டில் பூஜை செய்யும் சமயம் மகாலக்ஷ்மி படத்திற்கு முன் 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோளிகள், குங்குமப் பூ, மஞ்சள் சட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றோடு வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜை செய்வதால் நம் வீட்டில் எல்லா காலங்களிலும் மிகுந்த பொருள் வரவு இருந்துகொண்டே இருக்கும்.

தீபாவளி திருநாள் அன்று பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் போன்றவற்றை தானமளிக்க ஸ்ரீமகாலக்ஷ்மி கடைக்கண் பார்வை பட்டு இல்லம் சிறக்கும்.

சுப நாளான தீபாவளி தினத்தில் பசுக்கள் மற்றும் குரங்குகளுக்கு சாப்பிட பழங்களை அளிப்பது, நம் எப்பேர்ப்பட்ட பாவத்தையும், கர்ம வினையையும் போக்கும். கோயில்களுக்குச் சென்று வழிபட்டு பிறகு கோயில்களில் திருக்குளத்தில் இருக்கும் மீன்களுக்கு சிறு கோதுமை மாவு  உருண்டை மற்றும் பொரி போட வறுமை நீங்கும்.

இதையும் படியுங்கள்:
திருமலை திருப்பதியில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை!
Diwali and Mahalakshmi grace

தீபாவளியன்று சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் லட்டுகள் செய்து குபேரன் மற்றும் மகாலக்ஷ்மி தேவியை வழிபடுபவர்களுக்கு மகாலக்ஷ்மி மற்றும் குபேரன் ஆகிய இருவரின் ஆசிகளும் கிடைக்கப்பெற்று எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் மிகுந்த தன லாபத்தை பெறும் யோகம் உண்டாகும்.

ஜெயின் மதத்தில் தீபாவளிக்கு 8 தினங்களுக்கு முன்பே உண்ணாவிரதம் கடைபிடிப்பர். இதை ‘பர்யூசன் பர்வா’ என்று அழைக்கின்றனர். இந்த விரதத்தின்போது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வர். அந்த நாட்களில் காய்கறி உணவைத் தவிர்த்து வெறும் வெந்நீர் மட்டுமே அருந்துவர். இந்த 8 நாட்களில் ஜெயின் மதத்தில் உள்ள எல்லா வயதினரும் ஒன்றுசேர ஜெயின் கோயில்களுக்கு சென்று ‘கல்ப சூத்ரா’ படிக்கச் சொல்லிக் கேட்பர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com