ஆடி கிருத்திகை.. திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்!

ரயில்
ரயில்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகனுக்கு மிகவும் உகந்த நாளான ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் நேத்திக்கடனை செலுத்துவதற்காக செல்கின்றனர். இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட இருக்கிறது.

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 09 ம் தேதி வருகிறது. இதனையொட்டி நாளை lகாலை 07.33 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி காலை 07.44 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. அன்று காலை 09.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதால் காலை 9 மணிக்கு துவங்கி 11 வரை முருகப் பெருமானுக்குரிய பூஜைகளை செய்து வழிபடலாம்.

இதனால், வெளியூரில் இருந்து முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆடி கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலில்g கூடுதல் விசேஷம் என்பதனால் திருத்தணிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதனால் பக்தர்கள் உடனே புக் செய்து முருகனை தரிசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com