இந்த பூக்களை வீட்டில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

Spiritual benefits of flowers!
Spiritual benefits of flowers!

வீட்டில் சில பூக்களை வைப்பது அழக்குக்காக என்பதையும் தாண்டி ஆன்மீக ரீதியான நன்மைகளும் அதில் அடங்கி உள்ளன. சில மலர்களின் நிறம், வாசனை போன்றைவை தெய்வத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய மலர்களை வீட்டில் வைத்திருக்கும்போது செல்வம், மனநிம்மதி, வெற்றி போன்றவற்றை தரக்கூடியதாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1.பவளமல்லி.

கிருஷ்ணரால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட மலர் பவளமல்லி என்று கூறுவார்கள். இதை தெய்வீக மலராக கருதுகிறார்கள். பவலமல்லியின் காம்பு பவள நிறத்தில் இருக்கும். இது பகலில் பூக்காமல் இரவில் பூக்கக்கூடிய தன்மையை கொண்ட மலராகும். பவளமல்லி திருமாலுக்கு மிகவும் பிடித்த மலராகும். இது மிகவும் வாசனையுடைய மலர். இதை பூஜையறையில் வைத்து வழிப்படும் போது தெய்வத்தையே வசியப்படுத்தி வைத்துக்கொள்ளும் வல்லமையை உடையது.

2.மனோரஞ்சிதம்.

பூஜைக்கென்றே சிறப்பாக வளர்க்கப்படும் மலர் தான் மனோரஞ்சிதமாகும். தேவர்கள் இறைவனை மனோரஞ்சித மலர்களால் தான் பூஜிப்பார்களாம். இந்த பூவிற்கு அதிக வாசனையுண்டு. இந்த மலரை கையில் வைத்து கொண்டு வேறு எந்த வாசனையை நினைத்தாலும், அதை உணர முடியும் என்று கூறுகிறார்கள். இந்த பூவை தொழில் செய்யும் இடத்தில் வைக்கும் போது, தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும்.

3.செண்பகப்பூ.

செண்பகப்பூ பார்ப்பதற்கு அழகாக மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் பூக்கும் மலராகும். இது சிவப்பெருமானுக்கு மிகவும் உகந்த மலர். இரண்டு செண்பகப்பூ மரங்களை நடுபவர் சொர்க்கம் செல்வார் என்று பிரம்மன் வரம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. செண்பகப்பூ வளரும் இடம் மிகவும் செல்வ செழிப்போடு இருக்கும். நீர்வளம், நிலவளம் உள்ள இடக்களிலே இந்த மலர் வளருமாம்.

செண்பகப்பூ சுக்கிரனுக்கு மிகவும் உகந்த பூவாகும். வெள்ளிக்கிழமை வரும் சுக்கிர ஹோரையில், செண்பகப்பூவை சுக்கிரனை நினைத்து மஹாலட்சுமிக்கு வைத்து பூஜித்தால் செல்வ செழிப்பு பெருகும் என்று கூறப்படுகிறது.

4.பிரம்ம கமலம்.

இந்த மலர் பிரம்மனின் மறு உருவமாகவே கருதப்படுகிறது. இந்த மலரில் பிரம்ம தேவன் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படுகிறது. பிரம்மகமலத்தை வழிப்பட்டால் அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மலருக்கு மனதை தூய்மையாக வைத்து கொள்ளும் சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும். இந்த மலர் பத்ரிநாத் சன்னதியில் விஷ்ணுவுக்கும், கேதர்நாத் சன்னதியில் சிவனுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 6 விஷயங்களைத் தெரிஞ்சுக்காம ஜிம்முக்கு போகாதீங்க! 
Spiritual benefits of flowers!

5. கிருஷ்ண கமலம்.

நாகலிங்க மலரில் சிவப்பெருமான் வாசம் செய்வது போல கிருஷ்ண கமலத்தில் கிருஷ்ணர் வாசம் செய்கிறார். இந்த பூவில் அதிகப்படியான நேர்மறையாற்றல் உள்ளது என்று கூறுகிறார்கள். இந்த பூவிற்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்ற பெயரும் உண்டு. இந்த பூவை வீட்டில் வைப்பதால் ஐஸ்வர்யம் பெருகும் என்று கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட மலர்களை வீட்டில் வளர்ப்பது இயற்கையாகவே நல்லது. அதில் உள்ள மருத்துவ குணங்களை நமக்கு தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் ஆன்மீக ரீதியாகவும் இது இருக்கும் இடங்களில் நன்மையை தருகிறது. செடிக்களையும், பூக்களையும் வீட்டில் வளர்ப்பது ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com