
முன்னோர்களின் அறிவுரைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஒவ்வொன்றுக்கு பின்னும் அறிவியல் காரணங்கள் இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை.
விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் கோவில்களில் வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டுவது ஒரு அறிவியல் காரணத்தைக் கொண்டுள்ளது. மக்கள் கூட்டத்தால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைட்டு மற்றும் வியர்வை போன்றவற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு அதிகம். மாசுபட்ட காற்றை தூய்மைப்படுத்தி ஆக்ஸிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவை தான் இந்த வாழை மரமும், மாவிலைகளும். அதனால் தான் நம் முன்னோர்கள் விசேஷ நாட்களில் இவற்றை கட்டச் செய்தனர்.
அரச மரங்கள் அதிக அளவில் பிராணவாயுவை வெளியிடுகின்றன. எனவே கோவில்களில் அரச மரத்தை நடுவது அல்லது கோவிலைச் சுற்றி இருப்பது நல்ல ஆற்றல் மற்றும் சுத்தமான காற்றைப் பெற உதவுகிறது. அதைச் சுற்றி அமர்ந்து தியானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.
இந்திய பாரம்பரியத்தில் நமஸ்காரம் என்பது இரண்டு கைகளையும் கூப்பி, ஆள்காட்டி விரல்களின் நுனிகளை ஒன்றாக வைத்திருப்பது ஒரு அறிவியல் பூர்வமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் செயலாகும்.
இந்த குடமுருட்டல், கோவில் கோபுரங்களில் உள்ள கலசங்களின் மீது உள்ள அஸ்மா கலசத்தின் கதிர்வீச்சை, வானில் உள்ள அனைத்து ஆற்றல் மற்றும் சக்திகளை ஈர்த்து, கோயிலுக்குள் உள்ள கருவறைக்கு கொண்டு வருகிறது. இது கோவிலுக்குள் உள்ள ஆன்மிக ஆற்றலை வலுப்படுத்துகிறது.
வீட்டில் பூச்சித்தொல்லை, கொசுத்தொல்லை, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போன்றவற்றின் நடமாட்டத்தை குறைக்க இந்த சாம்பிராணி போடப்படுகிறது. அத்துடன் வீட்டில் எதிர்மறை ஆற்றலைப் போக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யவும் சாம்பிராணி மணம் உதவுகிறது.
இடி இடிக்கும் பொழுது கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் அந்த மின்னதிர்ச்சியை உள்வாங்கி தரைக்கு கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த கோபுரத்திற்கோ, சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே தான் இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாக கட்டடங்கள் கட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
உச்சி வெயில் காலங்களில் சூரிய ஒளி நேரடியாக கிணற்றில் விழும். இதனால் திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷ வாயு உண்டாகலாம். அம்மாதியான சமயங்களில் கிணற்றில் எட்டிப் பார்ப்பதால் மயக்கம் ஏற்படவோ அல்லது தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு. எனவேதான் நம் முன்னோர்கள் உச்சி வெயிலில் கிணத்தை எட்டிப் பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
இதைப் போன்றே நகத்தை கடித்தால் தரித்திரம் ஏற்படும் என்றும், வாசல் நிலைப்படியில் மஞ்சள் தடவ சிறந்த கிருமி நாசினியான இவை வெளியே உள்ள கிருமிகளை உள்ளே வராமல் தடுக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆன்மிக அறிவுரைக்குப் பின்னால் அறிவியலும் கலந்து இருக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை தானே!