அடிபிடிக்காமல், கட்டியாகாமல் பால் கேசரி செய்வது எப்படி?

healthy sweet recipes
milk kesari
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவை:

சேமியா, ரவை - தலா அரை கப்

பால் - 3 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

நெய் - 3 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - ஒரு ஸ்பூன்

ஏலக்காய் - 4 

உலர் திராட்சை - ஒரு ஸ்பூன்

கேசரி பவுடர் - ஒரு பின்ச்

செய்முறை:

வாணலியில் நெய் சிறிதளவு விட்டு சேமியா, ரவையைத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பிறகு சேமியா, ரவையைச் சேர்த்து பாலிலும் வேக விடவும். இதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். தண்ணீருக்குப் பதில் முழுக்க முழுக்க பால் பயன்படுத்துவதால் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

பால் கேசரி, தண்ணீருக்கு பதிலாக பால் சேர்ப்பதால், மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

சர்க்கரை சேர்த்த பிறகு, கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் அள்ளித்தரும் புரோட்டின் நட்ஸ் பவுடர்!
healthy sweet recipes

விருப்பப்பட்டால், கேசரிக்கு பிரகாசமான நிறம் கொடுக்க சிறிது மஞ்சள் உணவு வண்ணம் சேர்க்கலாம். 

அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சை யை சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி!

-பி. மஹதி

logo
Kalki Online
kalkionline.com