மரத்தை வெட்டப் போய்... முருகன் தோன்றிய கதை!

Sri Marathandavar
Sri Marathandavar
Published on

இக்கோவிலில் முருகப்பெருமான் தோன்றி மறைந்த அதிசயத்தை மக்கள் பலர் பார்த்து வியந்துள்ளனர். அத்தகைய அதிசயம் நிகழ்ந்த கோவில் மலேசியாவில் பஹான் மாநிலத்தில் உள்ள மாரான் நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒருவர் மனம் உருகி வேண்டிக்கொண்டால் நிச்சயம் முருகப்பெருமான் அதை நிறைவேற்றுவார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்தக் கோவில் 'ஸ்ரீ மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி' ஆலயமாகும்.

இந்த அதிசயம் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அச்சமயம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து குவாந்தானுக்கு செல்லும் பயணப் பாதையை அமைக்கும் பணி தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அடர்ந்த பசுமையான காட்டில் தொழிலாளர்கள் ஒரு பெரிய மரத்தை வெட்டினர்.

அப்போது அந்த மரத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்தது. அதை அங்கிருந்த அனைவரும் பார்த்து அதிர்ந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு அருள்வாக்கு வந்தது. அவர், 'இந்த மரத்தை வெட்டாதீர்கள். இது புனிதமான இடம். அதனால் பாதையை வேறு இடமாக மாற்றுங்கள்' என்று கூறினார். 

இதை அங்கிருந்த ஆங்கில மேற்ப்பார்வையாளரும் கவனித்தார். ஆனால், அவர் அந்த அருள்வாக்கை அலட்சியமாக எடுத்துக் கொண்டார். அந்த அருள் வாக்கை மீறி மரத்தை வெட்டுவதற்கு உத்தரவிட்டார். அங்கிருந்த மக்கள் பயத்துடன் அந்தமரத்தை வெட்டுவதற்கு கோடாளியை உயர்த்திய போது, அந்த மரத்தின் மீது ஒரு பாலகனின் ஒளிமயமான உருவம் தோன்றி மறைந்தது. அது வேறு யாருமில்லை நம் முருகப்பெருமான் தான். அவரே பாலகன் வடிவில் தோன்றி அனைவருக்கும் காட்சித் தந்து மறைந்துள்ளார். 

இதைக் கண்ட அந்த ஆங்கில மேற்ப்பார்வையாளர் நடுங்கிப் போனார். உடனடியாக அந்த மரத்திலிருந்து பாதையை தள்ளி அமைக்க உத்தரவிட்டார். அன்றிலிருந்து அந்த மரம் புனித ஸ்தலமாக மாறியது. அந்த முருகப்பெருமானின் அருள் வெளிப்பட்ட மரத்திற்கு அடியில் ஸ்ரீ மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.

இங்கு வந்து முருகப்பெருமானை வேண்டும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இக்கோவிலில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானுக்கு காவடி தூக்கி வழிப்படுகிறார்கள். நீங்களும் மலேசியாவிற்கு செல்லும் போது கட்டாயம் இந்த மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படியுங்கள்:
டிரெண்டாகி வரும் 'கார்டிசால் காக்டைல்'... அப்படி அதில் என்ன தான் இருக்கு?
Sri Marathandavar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com