டிரெண்டாகி வரும் 'கார்டிசால் காக்டைல்'... அப்படி அதில் என்ன தான் இருக்கு?

Cortisol cocktail
Cortisol cocktail
Published on

காக்டைல் என்றதும் ஏதோ மதுபானம் பற்றி சொல்ல போகிறேன் என்று நினைக்க வேண்டாம். இந்த கார்டிசால் காக்டைல் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானமாகும். இதை 'Adrenalin cocktail' என்றும் கூறுகிறார்கள். ஏனெனில், இந்த பானத்தை அருந்தும் போது ஸ்ட்ரெஸ் குறைவதாக சொல்லப்படுகிறது. நம்முடைய உடலில் உள்ள எலக்டிரோலைட்டை(Electrolyte) சமநிலையில் வைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இதன் பயன்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

கார்டிசால் காக்டைல் தயாரிக்க சிட்ரஸ் பழங்களான ஆரஞ்ச் அல்லது எழுமிச்சைப்பழ சாறு, சிறிதளவு உப்பு, இளநீர் ஆகியவை சேர்த்து தயாரிக்க வேண்டும். இதை அருந்தும் போது நாம் உடலில் உள்ள கார்டிசால் ஹார்மோனை சீராக சுரக்க வைக்க உதவுவதால் உடலில் உள்ள ஸ்ட்ரைஸ்ஸை குறைக்கிறது.

நம் உடலில் கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும் போது அதிகப்படியான உடல் நலக்குறைவு ஏற்படும். உடல் எடை அதிகரிப்பது, சர்க்கரை அளவு அதிகரிப்பது, ரத்த அழுத்தம், Mood swings போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கார்டிசால் காக்டைலை அருந்தும் போது இந்த பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

அதனுடைய கண்ணை பறிக்கும் நிறம், அசத்தலான சுவை, ஆரோக்கிய பலன்கள் இந்த பானம் வைரலாவதற்கான முக்கிய காரணம். ஆரஞ்ச் அல்லது எழுமிச்சைப்பழ சாற்றில் வைட்டமின் சி, இளநீரில் பொட்டாசியம் மற்றும் உப்பில் சோடியம் உள்ளது. இது உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பானத்தை அருந்தலாம்.

இது நம் உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவைக் குறைக்கிறது. பதற்றம், அலுப்பு போன்றவற்றை சரி செய்கிறது. இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட் நம் உடலில் நீரேற்றைத்தை தக்க வைப்பதோடு எலும்புகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுகிறது. கார்டிசால் ஹார்மோனை சுரக்கக்கூடிய Adrenal Gland க்கு ஊட்டமளிக்கிறது.

நேரடியாக இது உடல் எடையை குறைக்க உதவுவதில்லை. அதற்கு பதிலாக உடலில் உள்ள ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பதால் அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்ள தூண்டும் உணர்வை தவிர்க்கிறது. எனினும், எந்த ஒரு உணவுக் கட்டுப்பாடோ அல்லது ஆரோக்கியம் சம்மந்தமான விஷயங்களை தொடங்குவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லதாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
தலையணை அவசியமா? இல்லையா? நல்ல தலையணையை தேர்வு செய்வது எப்படி?
Cortisol cocktail

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com