எழுபது அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயக் கோயில்!

எழுபது அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயக் கோயில்!
https://www.dailythanthi.com

சிவபெருமானை ஜோதி வடிவில் தரிசிக்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். பீகார் மாநிலம், மந்தர் மலைப்பகுதியில் எழுபது அடி ஆழத்தில் நீரில் மூழ்கியுள்ள சங்கு ஒன்று சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம் வருடா வருடம் நடைபெறுகிறது.

பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஓட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில் பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது. இந்த சங்கானது வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறி வருகின்றனர்.

புராணக் கதையின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுகிறது . பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மனதை ரிலாக்ஸ் ஆக்கும் 5 எளிய வழிகள்!
எழுபது அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயக் கோயில்!

இந்த மலைக்கு பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்குச் செல்ல வனத்துறையிடம் பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com