மந்திர சக்தியும் மருத்துவ குணமும் கொண்ட ஸ்வாமி தீர்த்தம்!

Swami Theertham has magical power and medical properties
Swami Theertham has magical power and medical propertieshttps://www.shakthionline.com
Published on

கோயிலில் ஸ்வாமியை வழிபட்டுவிட்டு திரும்பும் முன் தீர்த்தம் வாங்க வேண்டும் என்றும், அதன் பிறகே பிரசாதம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவது உண்டு. தெய்வ அம்சத்தை மந்திர ஒலியுடன் அபிஷேகம் செய்து எடுத்த நீரே தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குவது.

நம்பிக்கை மற்றும் சாஸ்திரத்தின் இரண்டு குணங்களும் அடங்கியதே தீர்த்தம். தேவ விக்கிரகத்தின் பரிசுத்தத்தாலும், மந்திர ஒலிகளாலும் புனிதமாக்கப்பட்ட பரிசுத்தம் முதலாவது குணம். துளசி முதலிய மூலிகைகளின் மருத்துவ குணங்களே இரண்டாவது.

வலது கையின் ஐந்து விரலும் மடங்கும்போது உண்டாகும் கைக்குழியில் தீர்த்தம் வாங்க வேண்டும் என்பது விதி. கைக்குழியை அப்படியே உயர்த்தி பிடித்து கையில் உயர்ந்து காணப்படும் சந்திர மண்டலத்துக்கும், சுக்கிர மண்டலத்துக்கும் மத்தியிலுள்ள இடுக்கு வாயிலாக தீர்த்தம் அருந்த வேண்டும். இவ்வாறு தீர்த்தம் அருந்துவதனால் நன்மைகள் பல என்பதை மேனாட்டு ஆராய்ச்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

தீர்த்தங்களில் சேர்க்கும் துளசி, குவளை, தாமரை, மந்தாரை, தெற்றி மஞ்சள் என்பவற்றின் மருத்துவ குணங்களால் முக்கியமாக இரத்த ஓட்டம் சீரடைகின்றது. இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி உடலை சுத்தீகரிக்கின்றது.

இதையும் படியுங்கள்:
அச்சம் தீர்க்கும் சரபேஸ்வரர் வழிபாடு!
Swami Theertham has magical power and medical properties

இந்து மத ஆச்சாரத்தில் தீர்த்தம் அருந்துவதன் அவசியத்தைப் பற்றி விளக்கம் உண்டு. பொதுவாக, உதடுகளில் உமிழ் நீர் இல்லாவிட்டாலும் வாய்க்குள் உமிழ் நீர் இருக்கும். வாய்க்குள் நாவின் அசைவின் விளைவாக உதடுகளும் எச்சில் ஆக மாறும். அதனால் உதடுகளை வாய்க்குள் செலுத்தி விட்டு தீர்த்தம் அருந்த வேண்டும். இரு உதடுகளும் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அருந்திய தீர்த்த ஜலத்தின் மிச்சமாக உள்ளங்கையில் இருப்பதை தலையிலும், முகத்திலும், உடலிலும் தெளிக்க வேண்டும். வாங்கிய தீர்த்தத்தில் ஒரு துளியைக் கூட தரையில் விழச் செய்யாமல் இருப்பது உயர்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com