கோவாவின் மிகப்பழமையான கோவில் எது தெரியுமா?

 Tambdi Surla Mahadev Mandir
Shivan Temple
Published on

ஜெயின் கட்டடக்கலையால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோவிலே கோவாவின் மிகப்பழமையான கோவிலாக இருந்து வருகிறது. அந்தப் பகுதியில் இஸ்லாமியர்களின் போர்கள் உட்பட பல போர்கள்  நடைபெற்ற போதிலும், இது கம்பீரமாக இருந்து வரும் கோவிலாக விளங்குகிறது.

பொதுவாக கோவா என்றால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். கடற்கரை போன்ற எண்ணற்ற இயற்கை அழகினால் உருவான கோவாவை, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், கோவா இளைஞர்களுக்கான இடம் மட்டுமல்ல, பெரியவர்களுக்கான இடமும்தான் என்பது பலருக்கும் தெரியாது. ஏராளமான சர்ச்கள், கோவில்கள் என பழமைக்கும், பக்திக்கும் பெயர்போனது கோவா.

சரியாக 14ம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆட்சி செய்த டெல்லி சுல்தான், தென்னிந்தியாவையும் தன் வசமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு வந்தார். அப்படி தென்னிந்தியா நோக்கி வரும்போதே, அவர் கண்ணில் பட்ட ஒரு இடம்தான் கோவா. அப்போது சுல்தானின் படை, அந்தக் கோவில் உட்பட கோவாவின் அனைத்து இடங்களையும் அடித்து உடைத்து சேதமாக்கினர். அப்போது அந்தக் கோவில் கடம்பா ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

அதன்பின்னர் 1510ம் ஆண்டு போர்ச்சுகல் படை கோவாவிற்கு வந்தபோது, அந்தக் கோவிலை மேலும் சேதப்படுத்தினார்கள். கோவாவின் ஒரு பகுதியில் போர்ச்சுகீஸ் மக்கள் வாழும்போது, அந்தக் கோவில் அனாதையாகத் தனித்து நின்றது. பூஜைக்கூட செய்யப்படாமல் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்தது. போர்ச்சுகலின் படை அந்தக் கோவில் உட்பட கிட்டத்தட்ட 300 கோவிலை சேதப்படுத்தினர். இப்படி பல தாக்குதலுக்குப் பின்னரும் அந்த சிவன் கோவில் கம்பீரமாக நின்று வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் அந்தக் கோவிலை கட்டிய முறை என்றே கூறலாம். இக்கோவில் சாதாரண பாறைகளால் கட்டப்படவில்லை. கருப்பு வகைப் பாறைகளாலும், டால்க் க்ளோரைட் கற்களாலும் கட்டப்பட்டது. இந்த கருப்பு வகைப் பாறைகள், தக்காணப் பீட பூமி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்றைய காலத்தின் அறிய வகை தாதுக்களால் ஆன கற்கள் என்று கொல்லப்படுகிறது.

ஜெயின் கட்டடக்கலையில் மிகவும் திடமாகக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை சுற்றி இருக்கும் பசுமை, கண்களைப் பறிக்கும். இந்தக் கோவிலின் உள்ளே வடிவமைப்புகள், சில கர்நாடகா கோவில்களின் வடிவமைப்புகள் போலவே காணப்படுகின்றன. அதற்கு காரணம் கர்நாடகாவின் சில கோவில்களும் கடம்பா அரசர்களே கட்டினார்கள். இந்த சிவன் கோவிலின் நந்திக்கு தலை இருக்காது. ஏனெனில், அதுவும் படை வீரர்களாக சேதமாக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியங்கள் நிரம்பிய ஆயிரங்கால் மண்டபம் பற்றி தெரியுமா?
 Tambdi Surla Mahadev Mandir

12ம் நூற்றாண்டில் கடம்பாவின் ராணி கம்லாதேவியால் கட்டப்பட்ட இந்த சிவன் கோவிலின் பெயர் Tambdi Surla Mahadev Mandir. மேலும் கோவாவின் மற்ற கோவில்களை விட சிறிய கோவில், இந்த சிவன் கோவிலாகும். எனினும், கோவாவின் பழமை வாய்ந்த கோவில் என்றால், அது இந்த Tambdi Surla Mahadev கோவில்தான். இந்தக் கோவிலின் கோபுர பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பாதிக் கோவில் கட்டிமுடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com