ஆன்மாக்களின் அமைதி தேடி... பித்ரு தோஷம் நீக்கும் 6 புண்ணிய தலங்கள்!

Holy places
Temples - Festivals

பொதுவாக கோவில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயரில்தான் அர்ச்சனை செய்யப்படும். ஆனால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மோட்சம் பெறவும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் சில வினோதமான கோவில்களில் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன.இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்யப்படும் வினோத கோவில்கள்:

1. நாகப்பட்டினம் காயாரோகணசாமி கோவில்

Holy places
காயாரோகணசாமி கோவில்

7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. புண்டரீக மகரிஷி தன் உடலோடு சிவனுடன் கலந்த தலம் இது. இக்கோவிலில் அதிபத்த நாயனாருக்கு மரியாதை செய்யும் விதமாக, அவ்வூரில் யாராவது இறந்தால் அவர்களது உடலை கோவில் வாசலுக்கு கொண்டு வருவார்கள். அப்போது சிவபெருமான் சார்பில் இறந்தவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் வினோத வழக்கம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  இக்கோவில் பிரகாரத்தில் முக்தி மண்டபம் உள்ளது.

2. திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

Holy places
திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புகழ்பெற்ற திருமேனிநாதர்(பூமிநாதர்) கோவில், இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக இங்கு அர்ச்சனை செய்து, மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதனால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
நிழற்படமே நேர்த்திக்கடன்: கலவை அங்காள பரமேஸ்வரியின் வினோத வழிபாடு!
Holy places

3. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்

Holy places
மகாலிங்கேஸ்வரர் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள், அபிஷேகங்கள் செய்து குறிப்பாக கிழக்கு வாசல் வழியாக சென்று வழிபட்டு மற்றொரு வாசல் வழியாக வெளியேறுவது சிறப்பு. பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மற்றும் முன்னோர்களின் சாபம் நீக்கும் தலமாக விளங்குகிறது.

4. திருவல்லம் பரசுராமர் கோவில் கேரளா

Holy places
பரசுராமர் கோவில் கேரளா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கரமனா ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருவல்லம் ஸ்ரீ பரசுராமர் கோவில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜைகள்(அர்ச்சனை) செய்யப்படும் கோவிலாகும். கொடிய மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஆன்மா சாந்தியடைய, இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடைய இக்கோவிலில் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு முன்னோர்களுக்காக செய்யப்படும் பலிகள் மற்றும் வழிபாடுகள் மிகவும் விசேஷமானவை.

5. அத்தி வாராஹி அம்மன் கோவில்

Holy places
அத்தி வாராஹி அம்மன் கோவில்

விழுப்புரம் மாவட்டம் சாலமேட்டில் அமைந்துள்ள அஷ்ட வாராகி அம்மன் கோவிலில் அத்தி மரத்தாலான வாராஹி அம்மன் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் முன்னோர் களின் ஆத்மா சாந்தி அடையவும், தோஷங்கள் நீங்கவும் சிறப்பான அர்ச்சனைகள், ஹோமங்கள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தர்ப்பணம் செய்ய ஆள் இல்லாதவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்வதாக கூறப்படுகிறது.

6. விஷ்ணு பாதம், கயா

Holy places
விஷ்ணு பாதம்

பீகாரில் உள்ள கயா விஷ்ணுபாதம், மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்து மோட்சம் பெற உதவும் மிக முக்கியமான புனித தலமாகும். முன்னோர்களுக்கு 'பிண்டதானம்' செய்ய உலகிலேயே புகழ்பெற்ற தலம் இது. இங்கு முன்னோர்களின் பெயரில் செய்யப்படும் வழிபாடுகள் அவர்களுக்கு நேரடியாக மோட்சத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது.

வழக்கமாக கோவில் அருகில் யாராவது இறந்தால் நடை சாற்றப்படும் வழக்கம் உள்ளது. ஆனால் இத்தலங்களில் இறந்தவர்களுக்கான ஆன்மா சாந்தி அடைவதற்காக பிரத்தியேகமாக  வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com