
செல்வம் நம் அனைவருக்கும் தேவையான ஒன்று. செல்வம் இல்லாமல் இவ்வுலகில் நம்மால் வாழ முடியாது. அத்தகைய செல்வத்தை நம் வீட்டில் சரியான இடத்தில் வைக்கும் போதே அது சேரும். இல்லையென்றால் வீண் விரயம் எற்படும். இந்தப் பதிவில் பணத்தை வீட்டில் எங்கே வைப்பது நல்லது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.
நாம் சம்பாதிக்கும் பணத்தை சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கு தர வேண்டிய மரியாதையை தர வேண்டும். அப்போது தான் பணம் வீண் விரையம் ஆகாமல் அதிகரிக்கும். வீட்டில் அனைவருமே சம்பாதித்தால், எல்லோர் கையிலும் பணம் இருக்கக்கூடாது. யாராவது ஒருவரிடம் கொடுத்து அவரிடமிருந்து தான் செலவுக்கு பணம் வாங்க வேண்டும்.
மாதம் சம்பாதிப்பவர்கள் தங்கள் பணத்தில் ஒரு ரூபாயாவது கடவுளிடம் வைத்து வழிப்பாடு செய்ய வேண்டும். இதனால் பணம் மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் வீண் விரையம் ஏற்படக்கூடாது என்றால், ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக எடுத்து வையுங்கள்.
இந்து சாஸ்திரத்தில் செல்வத்தை குறிக்கக்கூடிய மங்களகரமான பொருட்கள் உண்டு. நீங்கள் பணத்தை வைக்கும் இடத்தில் அந்த பொருட்களை வைப்பதால் செல்வம் அதிகரிக்கும்.
பச்சை கற்பூரம்
மஞ்சள்
கிராம்பு
கல் உப்பு
பச்சரிசி
இதுப்போன்றவையை செல்வம் இருக்கும் இடத்தில் வைத்திருந்தால் வீண் விரையம் ஏற்படாது.
சம்பளம் வாங்கியதும் முதலில் செய்யும் செலவில் மங்களகரமான பொருட்கள் வாங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கல் உப்பு
மஞ்சள்
குங்குமம்
ஜவ்வாது
போன்றவற்றை வாங்க வேண்டும்.
வீட்டில் நாம் பணத்தை வைக்கும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது. பணத்தை வைக்கக்கூடிய இடம் சுத்தமாகவும், நறுமணம் வீசக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வாஸ்துப்படி வடக்கு திசை மகாலக்ஷ்மி மற்றும் குபேரர் இருக்கும் இடமாக சொல்லப்படுகிறது.
எனவே, வடக்கு திசையில் செல்வம் வைப்பது சிறந்ததாகும். செல்வத்திற்கு உரிய நல்ல நாளாக வெள்ளிக்கிழமையை சொல்கிறார்கள். அதில் வரும் சுக்கிர ஓரையில் செல்வம் சம்மந்தமான பொருட்களை அடிக்கடி வாங்க வேண்டும். கல் உப்பு, மஞ்சள், வசம்பு, பச்சை கற்பூரம், ஜவ்வாது, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை வாங்கும் போது செல்வத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.