எமனை வெல்லும் ரகசிய மந்திரம்! அகஸ்தியர் அருளிய 11 சக்திவாய்ந்த வரிகள்!

Agasthiyar and other siddhas
Agasthiyar and Powerful siddha'sCredits:PInterest
Published on
deepam strip
deepam strip

கத்தியர், திருமூலர், போகர், கொங்கணர், கருவூரார், தன்வந்திரி உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், ஆன்மீகம், மருத்துவம் மற்றும் இயற்கையை வெல்லும் சித்து சக்திகளைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் காயகல்பம், யோகம், மந்திரம் மற்றும் ரசவாதம் மூலம் உடலை அழியாமல் காத்து நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்.

முக்கியமான சித்தர்கள்:

  • அகத்தியர்: சித்த மருத்துவத்தின் தந்தை. ஞானத்தின் உச்சம் என்று அழைக்கப்படுபவர்.

  • போகர்: பழனி மலை முருகர் சிலையை 'நவபாஷாணத்தால்' உருவாக்கியவர்.

  • திருமூலர்: 'திருமந்திரம்' அருளியவர். வருடத்திற்கு ஒரு பாடல் என மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்.

  • நந்தீஸ்வரர்: சிவபெருமானிடமிருந்து நேரடியாக ஞானம் பெற்றவர்; 18 சித்தர்களில் முதன்மையானவர்.

  • கருவூரார்: தஞ்சைப் பெரிய கோயில் கட்டுமானத்தில் ஆன்மீக ரீதியாக உதவி புரிந்தவர்.

அஷ்ட சித்திகள் (எட்டு வகை சக்திகள்):

சித்தர்கள் தங்களது தவ வலிமையால் எட்டு வகையான ஆற்றல்களைப் பெற்றிருந்தனர். அவை:

  1. அணிமா - அணுவைப் போல் சிறுத்தல்.

  2. மகிமா - மலையைப் போல் பெரிதாகுதல்.

  3. லகிமா - காற்றைப் போல் எடையற்றுப் போதல்.

  4. கரிமா - அளவிட முடியாத எடை கொள்ளுதல்.

  5. பிராப்தி - எவ்விடத்திற்கும் தடையின்றிச் செல்லுதல்.

  6. பிராகாமியம் - நினைத்ததை முடித்தல்.

  7. ஈசத்துவம் - படைத்தல், காத்தல் தொழில்களைச் செய்தல்.

  8. வசித்துவம் - அனைத்தையும் வசியம் செய்தல்.

சித்தர்கள் அருளிய ரகசிய மந்திரங்கள் (அகத்தியர் கூறியவை):

  1. ஓம் நசி மசி – எமனை வெல்லலாம்.

  2. ஓம் மசி மசி – அரசர்களும் பணிய நேரிடும்.

  3. ஓம் நங் நங் – தனித்துவமான ஆற்றல் உண்டாகும்.

  4. ஓம் அங் அங் – கெடுதல்கள் அண்டாது.

  5. ஓம் சிங் சிங் – கொடிய விலங்குகள் விலகி ஓடும்.

  6. ஓம் லங் லங் – உலகம் வசியமாகும்.

  7. ஓம் வசி வசி – சகலமும் வசியமாகும்.

  8. ஓம் நசி நசி – பகைவர்கள் மற்றும் படைகள் விலகும்.

  9. ஓம் மசி மசி – நினைத்த காரியங்கள் கைகூடும்.

  10. ஓம் அசி அசி – செல்வம் பெருகும்.

  11. ஓம் சிவ சிவ – தீமைகள் அகன்று நன்மை பெருகும்.

இவை அனைத்தும் அகஸ்தியர் சொன்னது. இவை தவிர 27 நட்சத்திரங்களுக்கும் சித்தர்கள் இருக்கிறார்கள். உடலை கோவிலாகவும், உள்ளத்தை இறைவனாகவும் கருதி வாழ்ந்து வந்தார்கள். சித்தர்கள் அழியா புகழுடன வாழும் சிரஞ்சீவிகள்.

18 சித்தர்கள் முக்கியமானவர்கள்(Powerful siddha's):

அவர்கள் அகஸ்தியர், போகர், திருமூலர், வான்மீகி, தன்வந்திரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர்,, கோரக்கர் குதம்பைசித்தர், மச்ச முனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, ராமத்தேவர், சட்டை முனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர் இவர்கள் அனிமா மகிமா லஹிமா பிரார்த்தனா ஈசத்துவம் வசித்துவம் கரீமா என எட்டு சக்திகளை கொண்டவர்கள்.இவர்கள் அனைவருக்கும் சிவபெருமானே முதன்மை சித்தராக கருதப்படுகிறார்.

இனி சித்தர்கள் வாழ்ந்த ஆயுட்காலம் மற்றும் அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களை பற்றி பார்க்கலாம்

1. அகஸ்தியர் நாலு யுகம் 48 நாட்கள்.

ஜீவசமாதி திருவனந்தபுரம்.

2. போகர் 300 ஆண்டுகள் 18 நாட்கள்.

ஜீவசமாதி பழனி மலை.

3. திருமூலர் 3000 ஆண்டுகள் 18 நாட்கள்.

ஜீவசமாதி சிதம்பரம்.

4. வான்மீகர் 700 ஆண்டுகள் 32 நாட்கள்.

ஜீவசமாதி எட்டுக்குடி..

5. தன்வந்திரி 800 ஆண்டுகள் 32 நாட்கள்.

ஜீவசமாதி வைத்தீஸ்வரன் கோவில்.

6. இடைக்காடார் 600 ஆண்டுகள் 18 நாட்கள்.

ஜீவசமாதி திருவண்ணாமலை.

7. கமல முனி 4000 ஆண்டுகள் 48 நாட்கள்.

ஜீவசமாதி அரூர்.

8. கருவூரார் 300 ஆண்டுகள் 42 நாட்கள்.

ஜீவசமாதி கரூர்.

9. கொங்கணர் 800 ஆண்டுகள் 16 நாட்கள்.

ஜீவசமாதி திருப்பதி.

10. கோரக்கர் 780 ஆண்டுகள் 32 நாட்கள்.

ஜீவசமாதி போயூர்.

11. குதம்பை சித்தர் 1800 ஆண்டுகள் 16 நாட்கள்.

ஜீவசமாதி மாயவரம்.

12. மச்சமுனி 300 ஆண்டுகள் 62 நாட்கள்.

ஜீவசமாதி திருப்பரங்குன்றம்.

13. பாம்பாட்டி சித்தர் 123 ஆண்டுகள் 32 நாட்கள்.

ஜீவசமாதி மருதமலை.

இதையும் படியுங்கள்:
தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது எப்படி? திருக்குர்ஆன் சொல்லும் பாடம்...
Agasthiyar and other siddhas

14. பதஞ்சலி ஐந்து யுகம் ஏழு நாட்கள்.

ஜீவசமாதி இராமேஸ்வரம்.

15. சட்டை முனி 880 ஆண்டுகள் 14 நாட்கள்.

ஜீவசமாதி ஸ்ரீரங்கம்.

16. ராமதேவர் 700 ஆண்டுகள் 6 நாட்கள்.

ஜீவசமாதி அழகர் மலை.

17. சுந்தரானந்தர் 880 ஆண்டுகள் 14 நாட்கள்.

ஜீவசமாதி மதுரை.

18. சிவவாக்கியர் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சித்தர் சமாதிகளுக்கு சென்று வழிபட்டு வந்தால் பல நன்மைகளை அடையலாம். அகஸ்தியர் அருளிய மந்திரங்களை சொன்னாலும் நல்ல பலன் கிடைக்கும். இன்றும் சித்தர்கள் நம் கண்களுக்கு தெரியாமல் சூட்சுமமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com