தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது எப்படி? திருக்குர்ஆன் சொல்லும் பாடம்...

நம்மிடம் இருக்கும் சில தீய குணங்களை பட்டியலிடும் திருக்குர்ஆன், அதிலிருந்து விடுபடவும் வழி கூறுகிறது.
Quran
Quranimage credit- wikipedia
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on
Deepam strip
Deepam strip

இறைவெளிச்சம் கிடைக்கப் பெற்ற நபிகள் நாயகம் கூறியதன் தொகுப்பு தான் திருக்குர்ஆன். இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் சிறப்பு எழுதப்பட்டதிலிருந்து ஒரு வார்த்தை கூட மாற்றம் காணாமல் அப்படியே இருப்பது தான்.

உலகில் பல தீய குணங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்று கூட இல்லாமல் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஏன் அந்த ஒன்றும் நம்மிடம் இருக்க வேண்டும். அதையும் இனங்கண்டு அதனையும் விட்டு விடலாம் அல்லவா? அப்படி நம்மிடம் இருக்கும் சில தீய குணங்களை பட்டியலிடுகிறது திருக்குர்ஆன்.

1. தற்பெருமை கொள்ளுதல்

2. பிறரைத் கொடுமை செய்தல்

3. கோபப்படுதல்

4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல்.

5. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்.

6. பொய் பேசுதல்

7. கெட்ட சொற்களை பேசுதல்

8. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை.

9. புறம் பேசுதல்

10. தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்

11. பாரபட்சமாக நடத்தல்

12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல்

13. பொய் சாட்சி கூறுதல்

14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்

15. வாக்குறுதியை மீறுதல்

16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்

17. குறை கூறுதல், கோள் சொல்லுதல்

18. வதந்திகள் பரப்புதல்

19. பொறாமைப்படுதல்

20. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்

தீய குணங்களை தேடிப்பிடித்து அடிமையாகும் மனிதன். அதிலிருந்து விடுபட இந்த 4 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும். தீய பழக்கங்களிலிருந்து எளிதாக விடுபடலாம் என்கிறது திருக்குர்ஆன்.

இதையும் படியுங்கள்:
ரம்ஜான், பக்ரீத்: இஸ்லாமியரின் பண்டிகைகள்; சடங்குகள் மற்றும் கடமைகள்
Quran

1. நிதானத்துடன் கூடிய கம்பீரம்.

2. எளிமையான வாழ்க்கை.

3. நல்ல மனமும், நாவடக்கமும்.

4. தன்னிலும் தாழ்ந்தவரிடம் பணிவுடன் நடத்தல்.

logo
Kalki Online
kalkionline.com