கங்கைக்கு நிகரான பம்பை: ஸ்ரீராமருக்கும் இந்த நதிக்கும் என்ன சம்பந்தம்?

Pamba river, Sri Ram Lakshmanan
Pamba river, Sri Ram Lakshmanan
Published on

யப்ப பக்தர்கள், சுவாமி ஐயப்பனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை பம்பா நதிக்கும் அளித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சபரிமலைக்கு கூடுதல் பெருமை சேர்ப்பது இந்த பம்பா நதிதான். இமயத்தில் தோன்றி, காசி நகரத்தின் வழியாக பாயும் கங்கை நதிக்கு ஒப்பாக பக்தர்களின் பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாக இந்த பம்பா நதி விளங்குகிறது. தென்கங்கை, தட்சிண கங்கை என்று அழைக்கப்படும் பம்பா நதியின் கரையோரத்தில்தான் சாஸ்தா சுவாமி ஐயப்பன் குழந்தை வடிவில் அவதரித்தார் என்று ஐயப்பனின் வரலாறு சொல்கிறது.

சீதா தேவியை ராவணன் கடத்திக்கொண்டு போன பிறகு ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதா தேவியை தேடி தென்னகம் முழுவதும் காடு, மலை என்று சுற்றி அலைந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மதங்க முனிவரின் குடில் அவர்களின் கண்ணில் தென்பட, அங்கு சென்றனர்.

இதையும் படியுங்கள்:
பகுத்தறிவுச் சிறுவன் டு உலக மகா குரு! - விவேகானந்தரின் மிரட்டலான பயணம்!
Pamba river, Sri Ram Lakshmanan

அந்த நேரத்தில் முனிவர் குடிலில் இல்லை. சிவாலயங்களை தரிசிப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். அவருடைய பணிப்பெண் நீலி என்ற மலைவாழ் பெண்தான் ஸ்ரீராம, லட்சுமணர்களை வரவேற்றாள்.

முனிவருக்கு பணிவிடை செய்து வந்த அப்பெண், தான் ஒரு தாழ்ந்த குலததைச் சேர்ந்தவள் என்ற காரணத்தால் ஸ்ரீராமருக்கும் லட்சுமணனுக்கும் உணவளிக்கத் தயங்கினாள். நீலியின் தயக்கத்தைப் போக்க விரும்பிய ஸ்ரீராமர், ‘இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட அனைவருமே சமமானவர்கள்தான். அன்புள்ளம் கொண்டவர்கள்தான் இவ்வுலகில் உயர்ந்தவர்கள்’ என்று சொல்லி, நீலியின் தயக்கத்தைப் போக்கினார்.

ஸ்ரீராமரின் அருளுரையை கேட்டு மகிழ்ச்சியுடனும் பணிவன்புடனும் அவர்கள் இருவருக்கும் உணவளித்து உபசரித்தாள் நீலி. அதனை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமர் அவளைப் புனிதப்படுத்த விரும்பினார். அவளிடம், ‘உன்னை தாழ்ந்த குலத்தவள் என்று உதாசீனப்படுத்திய மக்கள் என்றென்றும் உன்னைப் போற்றி வணங்கும் அழியாப் புகழை உனக்கு அளிக்க விரும்புகிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்’ என்று அன்புடன் கூறினார் ஸ்ரீராமர்.

இதையும் படியுங்கள்:
வைணவத் திருத்தலங்களில் பகல் பத்து, இராப்பத்து உத்ஸவங்களின் விசேஷம்!
Pamba river, Sri Ram Lakshmanan

அதற்கு நீலி, ‘எனக்கு மோட்சம் அளித்து இனிமேல் பிறப்பெடுக்காத நிலை வேண்டும்’ என்று கண்ணீர் மல்கக் கேட்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமர், ‘அன்பால் உயர்ந்த உன்னை இந்த உலகம் போற்றி வணங்கும் நிலை உனக்கு வரும். இந்தப் பகுதிக்கு வரும் அனைவருமே உன்னைப் போற்றி வணங்கி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன்’ என்று சொல்லி அவளுடைய பூரண விருப்பத்துடன் அவளை கங்கையை போல பொங்கிப் பெருகும் அழகான ஜீவநதியாக மாற்றினார். அந்த நதிதான் பம்பா நதியாகும்.

அதோடு, கங்கைக்கு நிகரான புண்ணிய நதியான பம்பா நதியிலேயே ஸ்ரீராமரும் லட்சுமணனும் மனம் குளிர நீராடி விட்டு, தம்முடைய தந்தை தசரதனுக்கும் பிதுர் தர்ப்பணம் செய்தனர். ஸ்ரீராமர் போற்றி கொண்டாடிய காரணத்தினாலே பின்னர் பல முனிவர்களும் தற்போது ஐயப்ப பக்தர்களும் பம்பா நதியை போற்றி வணங்கி வருகின்றனர்.

ஆர்.ஜெயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com