அரச மரத்தை இந்த இரண்டு தினங்களைத் தவிர வேறு நாட்களில் வழிபடக் கூடாது!

Arasa mara Vazhipadu
Arasa mara Vazhipadu
Published on

ந்து மத மரபுகளில் இயற்கை பாதுகாப்பிற்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள், குளங்கள் ஆகியவற்றை காப்பதற்காக கோயில்கள் பெரும்பாலும் நீர்நிலையின் அருகில்தான் கட்டப்படும். அதுபோல அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம் போன்றவையும் இறை வழிபாட்டில் உள்ளது. பல மரங்கள் கோயில் தல விருட்சமாக சிறப்பு பெற்றிருந்தாலும், அரச மரமே அனைத்திலும் முதன்மை பெறுகிறது.

கல்வி அறிவு மேம்பட, திருமணம் கைகூட, குழந்தை வரம் பெற அரச மரத்தை சுற்றி வந்து வழிபட, பல வேண்டுதல்கள் மக்களுக்கு உண்டு. இந்த நேரத்தில் அரச மரத்தை வழிபடுவது எப்படி என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இருக்கும் மரங்களிலேயே அதிக சிறப்பு வாய்ந்ததால் இது மரங்களின் அரசன் அல்லது அரச மரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்து மதத்தின் அனைத்துக் கடவுள்களும் அரச மரத்தில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அரச மரத்தை வழிபடுவதன் மூலம் பல கடவுள்களின் ஆசியை நாம் பெற முடியும்.அரச மரத்தில் விஷ்ணு பகவானும், லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். அரச மரத்தின் அடியில் விநாயகர் விரும்பி வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
களபம் தெளிப்பதன் காரணங்களும் பலன்களும்!
Arasa mara Vazhipadu

விசேஷ நாட்களில் அரச மரத்தை வழிபடுவதன் மூலம், கடவுளின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளையும் பெற முடியும். அரச மரத்தை வழிபடுவதற்கான சில முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கடவுளின் அருளை எளிதில் பெறலாம். சூரிய உதயத்தின்போது ஒரு விளக்கு ஏற்றி ​அரச மரத்தை  வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும். இதன் மூலம் மஹாவிஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்.

அமாவாசை மற்றும் சனிக் கிழமைகளில் அரச மரத்தை வழிபடுவது சிறந்தது. இந்த இரண்டு நாட்களிலும் அரச மரத்தை வழிபடுவதன் மூலம், ஒருவர் பிள்ளையாரின் ஆசிகளைப் பெறலாம். அமாவாசை நாளில் அரச மரத்தை வழிபடுவதன் மூலம், பித்ரு தோஷம் நீங்குவதோடு, முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதன் காரணமாக, அந்த நபரின் வீட்டிற்கு செழிப்பு வரத் தொடங்குகிறது.

அதேபோல, சனிக்கிழமை அன்று அரச மரத்தின் அடியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது அவரின் கடுமையான பார்வையில் இருந்து விலக்கு அளிக்கிறது. அது வாழ்க்கையின் கடினமான துயரங்களில் இருந்து விடுபட வழியைக் கொடுக்கும்.

ஞாயிற்றுக்கிழமை தவறுதலாகக் கூட அரச மரத்தை வணங்கக் கூடாது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தை வழிபடக் கூடாது. மற்ற நாட்களில் அரச மரத்தை சுற்றினால் அது வீட்டின் நிதி நிலையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரச மரத்தை வழிபடுவது நல்லதல்ல. அதனால், அவர் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆச்சரியத் தகவல்கள்!
Arasa mara Vazhipadu

பகலில் ஶ்ரீதேவி அரச மரத்தில் வசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரச மரத்தில் ஶ்ரீதேவியின் அக்கா மூத்த தேவி வசிக்கிறார் என்கிறது வேதம். அந்த நேரத்தில் வழிபாடு செய்வதும், மரத்தைத் தொடுவதாலும் , ஒருவரின் அதிர்ஷ்டம் போய் விடுகிறது.

அரச மரங்களை வெட்டுவது தவறு. அதனால், ஒவ்வொரு ஊரிலும் பெரிய மரமாக அரச மரம் வளர்ந்துள்ளது. அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதும், இம்மரத்தை 108 முறை சுற்றி வருவதும் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com