
ஆடி, தை மாதங்களில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்துவது என்பது ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும். பொதுவாக, அம்மன் கோயில்களில் எலுமிச்சை மாலை சாத்துவதன் மூலம் அம்மனின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், எலுமிச்சை அம்மனின் வெப்பமான திருமேனியை குளிர்விப்பதாகக் கருதப்படுகிறது.
எலுமிச்சை மாலை சாத்துவதற்கான காரணங்கள்: எலுமிச்சை மாலை சாத்துவதன் மூலம் அம்மனின் அருள் கிடைக்கும். இது அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. மேலும், அம்மன் ஒரு வெப்பமான தெய்வமாகக் கருதப்படுவதால், எலுமிச்சை மாலை சாத்துவதன் மூலம் அம்மனின் வெப்பத்தைத் தணிப்பதாகக் கூறப்படுகிறது. அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்துவதன் மூலம் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதீகம். சில வகை தோஷங்கள், பில்லி சூனியம் பாதிப்புகளில் இருந்தும் எலுமிச்சை மாலையை சாத்துவதன் மூலம் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி, எலுமிச்சை மாலை சாத்துவதன் மூலம் ராகு தோஷத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்துவது ஒரு விரதமாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் அம்மனின் ஆசி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. எலுமிச்சம் பழம் தீய சக்திகளை விரட்டும் சக்தி கொண்டதாகக் கருதப்படுகிறது.
அம்பிகையின் அம்சம் எலுமிச்சம்பழத்தில் நிறைந்து இருப்பதாக நம்பப்படுகிறது. எலுமிச்சை நம்மை பிரதிபலிக்கும் ஒரு பொருளாகவும் விளங்குகிறது. மேலும், நம் மனதின் உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை / காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே எறிய வேண்டும். எலுமிச்சையின் வெள்ளைத் தோல் நமது தூய மனதையும், உள்ளே இருக்கும் எலுமிச்சையின் பச்சை விதைகள் மாயையும் குறிக்கும்.
எலுமிச்சை மாலை சாத்தும் முன் செய்ய வேண்டியது: எலுமிச்சம் பழங்களை வாங்கி வீட்டில் சுத்தமான தண்ணீரில் சிறிது பன்னீரை ஊற்றி பழங்களைப் போட்டு நன்றாக சுத்தம் செய்து எலுமிச்சம் பழங்களை நூலோ, கயிறோ பயன்படுத்தாமல் நாரைப் பயன்படுத்தலாம். மஞ்சள் தேய்த்த நூலைப் பயன்படுத்தலாம்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களைக் கோர்த்து மாலையாகக் கட்டி அம்மனிடம் வேண்டிக்கொண்டு சாத்த வேண்டும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட செயல்கள் நிறைவேற எலுமிச்சை மாலை சாத்தும் வழக்கம் இன்றும் பக்தர்களிடம் இருக்கிறது.
எலுமிச்சை மாலையைக் கோர்க்கும்போது உடல் மற்றும் மனத் தூய்மையுடன் ஒரே அளவிலான நன்கு பழுத்த நல்ல நிறம் உள்ள பழங்களை வாங்கி மாலையாகக் கோர்த்து அம்மனுக்கு சாத்த வேண்டும்.
எலுமிச்சையில் விளக்கு: நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுபவர் விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்னைகள் அதிகம் இருந்தால் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறு சில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும் இரண்டு எலுமிச்சம் பழ விளக்கேற்றி அம்மனை மனம் உருகி வேண்டினால் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்கர்களின் நம்பிக்கை. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளியில் அம்மனை வேண்டி ஆலயத்துக்குச் சென்று எலுமிச்சம் பழம் மாலை சாத்தி அம்மனின் அருளைப் பெறலாம்.