
காயத்ரி மந்திரம், ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம்மந்திரம் அமைந்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்தது. வேதங்களின் தாய்தான் காயத்ரி தேவி. இம்மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் காயத்ரி தேவி இருப்பாள். இத்தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவானதுதான் காயத்ரி மந்திரம்.
‘ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்’
எனும் இம்மந்திரத்தின் பொருள் என்ன?
ஓம் - தெய்வீக சக்தி; ஒலி சின்னம், பூர் - உடல் விமானம், புவஹா - நிழலில்லா விமானம், ஸ்வ - வான விமானம், தத் - அந்தத் தலை தெய்வத்தின், ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி, வரேன்யம் - வணங்க வேண்டும், பர்கோ – பிரபல, தேவஸ்ய – பிரகாசமிக்க, தீமஹி - நம் தியானம், தியோ – அறிவினை, யா – யார், நஹ – எங்களுக்கு, ப்ரசோதயாத் – தெளிவுபடுத்துங்கள்.
‘நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்’ என்பது இதன் சுருக்கமான பொருள்.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்: கம்பீரத் தோற்றம், தரமான பேச்சு, வறுமை நீங்குதல், குறை நீங்குதல், பாதுகாப்பு வட்டம், கண்ணில் அறிவு தெரிதல், அபாயம் நீங்கும், நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும். மேலும், தொடர்ந்து இதை ஜபிப்பவர்கள் அமைதியாக இருப்பர், நற்செயல்களில் ஈடுபடுவர், காந்த சக்தி ஆகியவை உருவாகும். மேலும், வாழ்க்கையில் தடைகளை நீக்கும், மூளையை பிரகாசிக்கச் செய்யும், உள்ளுணர்வை தெளிவாக்கும்.