
ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தெய்வாம்சம் உண்டு. நீங்கள் பிறந்த மாதத்தின் மூலம் நீங்கள் எந்த தெய்வத்தின் குணநலன்களைக் கொண்டுள்ளீர்கள் என்பதை சுலபமாக அறிய முடியும். எந்தெந்த மாதத்தில் பிறந்தால், என்னென்ன குணாதிசயங்களை ஒருவர் பெற்றிருப்பார் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஜனவரி: இந்த மாதம் விநாயகப் பெருமானின் அம்சம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் அறிவுக்கூர்மை கொண்டவராகவும், வாழ்வில் விடாமுயற்சி உடையவராகவும் இருப்பார்கள்.
பிப்ரவரி: குபேர அம்சம் பெற்ற மாதம் இது. செல்வ வளம் மற்றும் செல்வாக்கு, நேர்மை மற்றும் வெளிப்படையாகப் பேசும் தன்மை உடையவராக இம்மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.
மார்ச்: முருகப்பெருமானின் அம்சமான மாதம் இது. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு வேகம், விவேகம், கருணை, லட்சிய உணர்வு மற்றும் நம்பிக்கை ஆகியவை அதிகமாகவே இருக்கும்.
ஏப்ரல்: தேவமுனி நாரதரின் அம்சம் உள்ள மாதம் இது. பேச்சுத் திறமையும், மனோ தைரியமும் உள்ளவர்களாக இந்த மாதத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.
மே: பார்வதி தேவி அம்சமான மாதம் இது. கருணை, தைரியம், மன உறுதி மற்றும் சாகச உணர்வு பெற்றவர்களாக இம்மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.
ஜூன்: மகாலக்ஷ்மி தாயார் அம்சம் பொருந்திய மாதம் இது. வசீகரமாகவும் செல்வ வளம் உடையவராகவும், கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாகவும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் விளங்குவர்.
ஜூலை: சூரியனின் அம்சமான மாதம் இது. அறிவுக்கூர்மை பெற்றவர்களாகவும் நல்ல செயல் வீரர்களாகவும் இம்மாதத்தில் பிறந்தவர் இருப்பர்.
ஆகஸ்ட்: துர்கை அம்மனின் அம்சம் பொருந்திய மாதம் இது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வீரம் நிறைந்தவர்களாகவும், சொந்த முயற்சியில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவர்.
செப்டம்பர்: அனுமனின் அம்சம் பெற்ற மாதம் இது. தைரியம், விசுவாசம் மற்றும் கடின உழைப்பாளிகளாக இம்மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.
அக்டோபர்: ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அம்சம் நிறைந்த மாதம் இது. மற்றவர்களை ஈர்க்கக் கூடியவர்களாகவும், விவேகமாக யோசிக்கக் கூடியவர்களாகவும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
நவம்பர்: கும்பகர்ணனின் அம்சம் பொருந்திய மாதமாகும் இது. உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.
டிசம்பர்: சிவபெருமானின் அம்சம் பெற்ற மாதம் இது. நிதானமாக செயல்படுபவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாக இம்மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் இருக்கும்.