வறுமையைப் போக்கி ஆயுளைக் கூட்டும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம்!

மூன்றாம் பிறை தரிசனம்
மூன்றாம் பிறை தரிசனம்
Published on

திகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சூரியனை வணங்குவது நல்லது. அதுபோல, மாலை நேரம் எப்பொழுதுமே மகாவிஷ்ணுவுக்கு உகந்த நேரமாகும். அமாவாசைக்கு மூன்றாவது நாள் வரும் சந்திரனை தரிசிப்பது மிகவும் சிறப்பு. மாலை நேரத்தில் மேற்கு திசையில் வானத்தில் அமாவாசையின் மூன்றாவது தினம் சந்திரனை தரிசிப்பது சிறப்பு. அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் நாளில் தெரியும் நிலவுதான் மூன்றாம் பிறை என்று அழைக்கப்படுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள் மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாள் திதியில் தெரியும் நிலவு அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும். இன்று மூன்றாம் பிறை தரிசனம்.

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தை போக்கும் என்பார்கள். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்பே 6.3௦ மணியளவில் தோன்றும் பிறையாகும். மூன்றாம் பிறையை தெய்வீகப் பிறை என்றும் சொல்லலாம். சிவபெருமான் தனது சிரசில் மூன்றாம் பிறை சந்திரனையே சூடி சந்திரமௌலீஸ்வரராகக் காட்சி தருகின்றார். மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் மட்டுமல்ல, அந்த சிவபெருமானின் ஒரு பகுதியை தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிடைக்கும்போதெல்லாம், ‘ஸ்ரீ சந்திரமவுலீஸ்வராய நம’ அல்லது
‘ஸ்ரீ சந்திரமவுலீஸ்வராய போற்றி’ என்று இடைவிடாமல் ஜபித்து வந்தால் மனம் அமைதியடையும். அறிவு ஒளி பெற்று தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகள் வராது. செல்வ வளம் பெருகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது. வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்து தரிசிக்கும்படியாக இருக்கும் மெல்லிய தங்க கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

ஒரு சமயம் முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான் சிவனின் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். அப்படி விநாயகப்பெருமான் சந்திரனையும் தரிசிக்கச் சென்றார். சந்திரன் தான் ஒரு முழு வெண்மதி என்பதால் யானையின் முகத்தை ஒத்த விநாயகர் திருவுருவைப் பார்த்து பரிகசித்தான். இதனால் கோபமுற்ற விநாயகர், ‘உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்’ என்று சாபமிட்டார்.

இதையும் படியுங்கள்:
உடல் நச்சுக்கள், அழுக்குகளை வெளியேற்றும் டீடாக்ஸ் பானங்கள்!
மூன்றாம் பிறை தரிசனம்

விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. முழு வெண்மதியாக இருந்த சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன் ஈசனை நோக்கி கடும் தவமிருந்து பழையபடி முழு வெண்மதியை பெற்றான். சந்திரனின் நிலையை உலகிற்கு உணர்த்தவே மாதத்தின் பாதி நாள் தேய்பிறையாகவும் அடுத்த பாதி நாள் வளர்பிறையாகவும் வலம் வருகின்றான் என்பது ஐதீகம். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவதை சந்திர தரிசனம் என்பார்கள். அமாவாசை அடுத்து வரும் நாட்களில் சந்திரன் படிப்படியாக உருப்பெறுகிறான்.

மூன்றாம் பிறையன்று சந்திரனை தரிசிக்கும்போது கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும்.

மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கண் பார்வை தெளிவாகும். ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால் சிவனை நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள். இன்று மூன்றாம் பிறை தரிசனம் காணுங்கள்; செல்வ வளமும் பெற்று சிறப்பாக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com