
பிரம்ம முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதற்கு 96 நிமிடங்களுக்கு முன்பாகவும், முடியும் நேரத்தில் 48 நிமிடத்திற்கு முன்பாகவும் இருக்கும் நேரம்தான் பிரம்ம முகூர்த்தம் ஆகும். அதாவது சுமார் ஒன்றரை மணி நேரம் என எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரம் சரஸ்வதி தேவி கண் விழிக்கும் நேரமாகும். இந்த நேரத்தில் எழுத்துப்பூர்வமான செயல்களை தொடங்கினால் நன்றாக இருக்கும். இந்த நேரம் மிகவும் மங்லகரமான நேரமாக கருதப்படுகிறது.
இந்த பிரம்ம முகூர்த்த நேரம் திருமணம், கிரகப்பிரவேசம் ஆகிய செயல்களுக்கு உகந்த நேரமாகும். உசாஷ் என்ற பெண் தேவதை தோன்றிய பின்னர்தான் சூரியன் உதயமாகும். எனவே, இதை உஷாத் காலம் என்கிறார்கள். இந்த நேரத்தில் இறைவனிடம் என்ன கோரிக்கை வைத்தாலும் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
சுமாராக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் காலை நாலு மணி முதல் காலை 6 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் எண்ணற்ற சித்தர்கள், தேவதைகள், இஷ்ட தெய்வங்கள், குலதெய்வங்கள், நம் முன்னோர்கள் சூட்சுமமாக உலவி வருவதாகக் கூறுவார்கள். இவர்கள் நம் கண்களுக்குப் புலப்பட மாட்டார்கள். இந்த நேரத்தில் நெகட்டிவ் வைப்ரேஷன் குறைவாகவும் பாசிட்டிவ் வைப்ரேஷன் அதிகமாகவும் காணப்படும்.
‘பிரம்மம்’ என்றால் படைத்தல், உருவாக்குதல் என்று பொருள்படும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் பார்வை தெளிவாகும். உடலில் நிறைய சுரப்பிகள் நன்கு வேலை செய்யும். உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
இந்த நேரத்திற்கு, ‘சரஸ்வதி யாமம்’ என்ற பெயரும் உண்டு. சூரியன் உதிப்பதற்கு 96 நிமிடத்திற்கு முன்பாக உள்ள நேரமாக இந்த நேரம் கணக்கிடப்படுகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் எந்த செயலுக்கும் தோல்வி என்பதே கிடையாது.
இந்த நேரத்தில் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நம் குல தெய்வத்தை நினைத்து மனம் உருகி வேண்டிக்கொண்டால் நம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். 64 முகூர்த்தங்களில் இந்த பிரம்ம முகூர்த்தம்தான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.