உங்கள் வீட்டின் இந்த ஒரு இடம் தான் நோய்களின் பிறப்பிடம்! உடனே கவனியுங்கள்!

Vastu problem in home that cause diseases
Vastu problem in home
Published on

வாஸ்துப்படி ஒரு வீடு தவறான அமைப்பில் (Vastu problem in home) இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்குத் தொடர் கஷ்டங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ஆரோக்கியம், உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில பொருட்கள் இந்தந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

1. வடகிழக்கு திசை (ஈசான்ய மூலை): வீட்டின் வடகிழக்கு திசை ஆரோக்கியத்தைக் குறிப்பதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இந்தப் பகுதியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நம் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படும். வடகிழக்கு திசையில் கழிவறை அமைப்பதையோ அல்லது குப்பை கொட்டும் இடமாக வைத்திருப்பதையோ தவிர்க்கவேண்டும்; மீறினால் தீராத வியாதிகளும் நரம்பு மண்டலப் பிரச்னைகளும் ஏற்படலாம். இந்தத் திசையில் படிக்கட்டு போன்ற பாரமான அமைப்புகள் இருந்தால், எப்போதும் சோர்வாக உணரக்கூடும். இந்த இடம் எப்போதும் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நம் வாழ்வில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

2. தென்மேற்கு திசை (கன்னி மூலை): தென்மேற்கு மூலையைக் கன்னி மூலை என்பார்கள். இது குடும்பத்தின் நிலைத்தன்மை மற்றும் வலிமையைக் குறிக்கிறது. இந்தத் திசையில் தப்பித்தவறிக்கூட பள்ளமோ, கிணறோ அல்லது செப்டிக் டேங்கோ (Septic Tank) இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அந்த வீட்டுத் தலைவருக்குத் தொடர் விபத்துகளும் உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. தென்மேற்கு திசை உயரம் குறைவாக இருந்தாலும் உடல்நல உபாதைகள் வரும். எனவே, அந்தப் பகுதி உயரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

3. தென்கிழக்கு திசை (அக்னி மூலை): சமையலறை எப்போதும் அக்னி மூலை என்று சொல்லக்கூடிய தென்கிழக்கு திசையில்தான் இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து வடகிழக்கு திசையில் சமையலறை இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்குச் செரிமானக் கோளாறுகள் மற்றும் பெண்களுக்குக் கர்ப்பப்பை சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

படுக்கையறை மற்றும் தூக்கம்: நாம் நிம்மதியாகத் தூங்கினாலே வியாதிகள் நம்மை அண்டாது. அத்தகைய படுக்கையறையைச் சரியான திசையில் அமைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் ரத்த ஓட்டம் பாதித்து, உடலின் வலிமை குறையும்.

இதையும் படியுங்கள்:
மைக்ரோ கிரீன்ஸ்: சிறிய செடி, பெரிய ஆரோக்கியம்!
Vastu problem in home that cause diseases

வீடு கட்டும்போது தூண்களுக்கு இடையிலான 'பீம்' (Beam) பகுதிக்கு நேராகத் தலை வைத்துப் படுக்கக்கூடாது; இது கடுமையான தலைவலியை உண்டாக்கும். மேலும், வீட்டின் நடைபாதைப் பகுதியில் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் தாராளமாக வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சம் போதிய அளவு இல்லையென்றால், கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com