மறுபிறவியே இல்லாத பெருவாழ்வு! ருத்ராட்ச கவசத்தில் ஜொலிக்கும் தேம்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி!

விஸ்வநாத சுவாமி -தேம்பெருமாநல்லூர் கோயில்
விஸ்வநாத சுவாமி-தேம்பெருமாநல்லூர் கோயில்AI Image
Updated on

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேம்பெருமா நல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோயில்.

இக்கோயில் மிகச் சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம் ஆகும். இங்கு அம்பாள் வேதாந்த நாயகி என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை தரிசித்தால் மீண்டும் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்

சிறப்பம்சங்கள்:

இத்தலத்தில் அம்பிகை சன்னதியின் எதிரில் மகாபைரவர் ஐந்தடி உயரத்திலும், சாந்த பைரவர் சிறிய உருவிலும் ஒரே சன்னிதியில் காட்சி தருகின்றனர்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் இல்லாமல் காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவருக்கு தினமும் பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.

சண்டிகேஸ்வரர் சன்னதியில் இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள்புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும், இன்னொருவர் இனிய திருமுறைகள் கிழக்கு நோக்கி உள்ளனர்.

இங்கு சனி பகவான் ஈஸ்வரன் பிடிக்கும் கோலத்தில் வித்தியாசமாக காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள்.

அம்பாள் சன்னிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறார்.

அம்பிகையின் கருவறையில் உள்ள விளக்கு அணைந்து அணைந்து எரிந்ததாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் நடுவில் உள்ள சூரியனை நோக்கியே உள்ளன. காலையில் தினமும் சூரியக்கதிர்கள் இறைவன் மேல் விழுகிறது.

இந்திரன், அக்னி, வசிஷ்டர் போன்ற பலரும் வழிபட்டுள்ளனர்.மக சித்தர் அகத்திய முனிவர் இத்தலத்திற்கு வந்து தரிசிக்க பல முறை முயன்றும் சில காரணங்களால் அவரால் வர இயலவில்லை என தல வரலாறு கூறுகிறது.

வருடத்திற்கு ஒருமுறை நாகர் இங்குள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தன் தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்கிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தை பேறு முதல் அஸ்வமேத யாக பலன் வரை: விரதங்களின் மகிமை!
விஸ்வநாத சுவாமி -தேம்பெருமாநல்லூர் கோயில்
விஸ்வநாத சுவாமி-தேம்பெருமாநல்லூர் கோயில்
விஸ்வநாத சுவாமி-தேம்பெருமாநல்லூர் கோயில்AI Image

இக்கோயில் சிவபெருமான் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒரு சேர தரிசனம் செய்து சாபங்கள் நீங்கிய புண்ணியத்தலம் இது என்பதால் ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறு பிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் தரிசிக்க வரும்போது அவருக்கு மறுபிறவி உள்ளதால் அவரை தரிசிக்க விடாமல் மகரிஷி தடுத்த தலம் இது

இத்தல இறைவனுக்கு 22,000 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறதுருத்ராட்ச கவசத்தை பிரதோஷம் சிவராத்திரி மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள்.

இது போன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது. இத்தலத்தில் சனி பகவான் ஆணவம் நீங்கியதால் இவரை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்புமிக்க ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com